தேன் ஒரு ஆரோக்கியமான பொருள் என்று கூறலாம். இந்த தேனோடு வெந்நீர் கலந்து நாம் பருகுவதின் மூலம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது.
அது சரி, அப்படி நாம் பருகுவதின் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை பற்றிய ஒரு விரிவான விளக்கத்தை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் வெண்ணீரோடு தேனை கலந்து ஒரு டம்ளர் குடிக்கும் போது உங்கள் உறுப்புகளில் எண்ணற்ற மாற்றங்கள் நடக்கும். அதிலும் குறிப்பாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரோடு எலுமிச்சை சாறு கலந்து பருகுவதின் மூலம் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இது உங்கள் பசியை கட்டுப்படுத்துவதின் மூலம் உணவின் அளவை குறைக்க உதவுவதால் உடல் எடை குறைப்பு என்பது மிக எளிதில் இயற்கையான முறையில் நடந்து விடுகிறது.
தொண்டையில் ஏற்படக்கூடிய வலிகளை குறைக்கக்கூடிய ஆற்றல் தேனுக்கு உள்ளது. கோடை காலத்தில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் நீங்கள் தேன் கலந்து பருகுவதின் மூலம் உங்கள் உடலில் நீர் சத்தை சிறப்பான முறையில் பராமரிப்பதோடு தொண்டைப்புண், உடல் வறட்சி போன்றவற்றை நீங்கள் தடுக்க முடியும்.
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் செரிமானத்தை அதிகப்படுத்தவும், மலச்சிக்கலில் இருந்து விடுதலை பெறலாம். உணவு உண்பதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து பருகி வந்தால் கட்டாயம் உங்களுக்கு மலச்சிக்கல் நீங்குவதோடு, செரிமான தொல்லையும் ஏற்படாது.
தேனில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் அதிக அளவு இருப்பதால் வெதுவெதுப்பான நீரோடு சேர்த்து இதை பருகும் போது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படக்கூடிய காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடிகிறது.
வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து பருகுவதின் மூலம் உடலை நீரேற்றத்தோடு வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு ஏற்படும் அலர்ஜியை குறைக்க இது உதவி செய்கிறது. ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து பழகுவதின் மூலம் ரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் கொழுப்பு எளிதில் எரிக்கப்படுகிறது.
hot water honeyதூக்கம் வராமல் தவிப்பவர்கள் தேனை இரவு உறங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் கலந்து ஓர் பருகுவதின் மூலம் எளிதில் தூக்கம் வரும்.