என்ன துல்கர் சல்மானுக்கு இத்தனை வயதான..? பார்த்தா அப்படி தெரியலையே..!

மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த வரும் மம்முட்டி அவர்களின் மகன் தான் துல்கர் சல்மான். வாரிசு நடிகர் நடிகைகள் என்பது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் மட்டுமல்லாது மலையாளத்திலும் உள்ளது.

மலையாளத்தில் மட்டுமன்றி தமிழ் திரையுலகிலும் பிரபலமானவர் நடிகர் மம்முட்டி. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியோ அப்படித்தான் மலையாளத்தில் அவரும்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனும்  நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்.துல்கர் சல்மானும் தந்தையைப் போலவே தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிப்பத்துடன் பின்னணி பாடகர் ஆகவும் சில படங்களை தயாரித்தும் வந்துள்ளார்.

2012ல் செக்கண்டு சோவ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் துல்கர் சல்மான் அறிமுகமானார்.இப்படத்தை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஜ் மொபிலஸ் போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இவரின் சிறந்த நடிப்பிற்காக நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் ஒரு கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றவர்.

வாயை மூடி பேசவும் என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்திருந்தார். இப்படத்தில் பாண்டியராஜன் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

இயக்குனர் பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கி இருந்தார் இப்படம் நகைச்சுவை கலந்த ஒரு காதல் திரைப்படமாக வெளிவந்தது. இவர் நடித்த சில திரைப்படங்களிலேயே மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்து முன்னணி கதாநாயகன் என்னும் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

சினிமாவிற்கு வரும் முன்பே இவர் திருமணம் செய்து கொண்டார். இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நடிகராவார். தற்போது இவருக்கு வயது 36. இவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

துல்கர் தன் குடும்பத்துடன் உள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.இவருக்கு என்ன வயது 36 ரா என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். பார்த்தால் அப்படி தெரியவில்லையே என்று ஆச்சரியமாக கூறுகிறார்கள் இவரது ரசிகர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …