“திரை தீ பிடிக்கும்…” – கடுப்பில்.. நிஜமாவே திரையை கொழுத்திய ரசிகர்கள்..! – வைரல் வீடியோ..!

பீஸ்ட் படம் ஒட்டிக்கொண்டிருந்த திரையரங்கில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக சில நிமிடங்கள் ஆடியோ பிரச்சனை ஏற்பட்டதால் கடுப்பான ரசிகர்கள் திரைக்கு தீ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் 13-ந் தேதி(இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனிரூத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக் குத்து’ பாடல், விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய பாடல்கள் யூ-டியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தன.

இந்த நிலையில் இன்று பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதனைக் காண திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் நள்ளிரவு முதல் குவிந்தனர். சில இடங்களில் டி.ஜே. பார்ட்டி வைத்து நடனமாடினர். பீஸ்ட் படம் திரையிடும் அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

அதே சமயம் திரையரங்குகள் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கான நேரம், இடம் ஆகியவை முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் திரை தீ பிடிக்கும் என்ற தீம் பாடலில் வரும் வரிகளுக்கு ஏற்ப நிஜமாகவே திரைக்கு தீ வைத்துள்ளனர் ரசிகர்கள். படம் ஓடிக்கொண்டிருக்கும் போது தொழில் நுட்ப கோளாறு காரணமாக சிறிது நேரம் ஆடியோ இல்லாமல் படம் ஓடியுள்ளது. இதனால் கடுப்பான ரசிகர்கள், திரையை தீப்பிடிக்க வைத்துள்ளனர்.


இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த மீம்களும் இணையத்தில் பறந்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version