பித்த வெடிப்பை சரிசெய்யும் மருத்துவ குறிப்புகள்.

பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு எந்த மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.  

பாதத்தில் போதுமான ஈரப்பசை இல்லாதபோதுதான் வெடிப்புக்கள் ஏற்படுகின்றது .இவற்றை ட்ரொமாட்டிக் ஃபிஷர்ஸ் என்று குறிப்பிடுகிறோம். பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வரக்கூடியது தான் இந்த பித்த வெடிப்பு 

இதனை போக்கக்கூடிய டிப்ஸ்

நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கொண்டு அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வைத்து அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் பித்தவெடிப்பு மறைந்துபோகும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3 முதல் 4 முறை கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

பித்த வெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். 

வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செய்து ஒரு சிட்டிகை தேன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர பித்த வெடிப்பு சரியாகும். 

தேனையும் சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

தேங்காய் எண்ணெய் 200 மில்லி விளக்கெண்ணை 200 மில்லி கடைகளில் கிடைக்கும் வெண் குங்கிலியம் 35 கிராம் சாம்பிராணி பொடி 10 கிராம் மிளகு 60 கிராம். எண்ணெயை சூடு செய்து அதில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் பொடி செய்து கலக்கவேண்டும். நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆற வைத்து கலக்கி அதை பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுத்து உறங்கும் முன் வெடிப்புகளில் தேய்த்துவர பித்த வெடிப்பு உடனே நீங்கும். 

கிளிஞ்சில் ,சுண்ணாம்புப் பொடி ,விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர பித்த வெடிப்பு குணமாகும். காலை மாலை என இரு வேளைகளில் தடவிவர வேண்டும்.