தல அஜித் கிட்ட  எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன? முதல் படத்தில் விருது பெற்று பாலிவுட்டை கலக்கும் இயக்குனர் விஷ்ணுவர்தன்!

தல அஜித் கிட்ட  எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன? முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற வார்த்தைக்கு ஏற்ப இயக்குனர் விஷ்ணுவர்தன்  பாலிவுட்டில் முதல் படத்திற்கான ஃபிலிம்  விருதைப் பெற்று  மிக உயரத்துக்கு சென்றுவிட்டார்.

 பல  ஆண்டுகளாக இவர்  மணிரத்தினம், ராம்கோபால் வர்மா, சந்தோஷ்சிவன் போன்றோருக்கு துணை இயக்குனராக பணியாற்றிய அனுபவம் தான் இவரின் முதல் வெற்றி விருதுக்கு காரணமாக இருந்திருக்கிறது. இந்த படத்திலும் அதற்கான சாயல் அப்படியே தெரியும்.

 தரமான கார்கில் போரை அடிப்படையாகக் கொண்ட கதையாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் போருக்கான தளவாடங்களை மிகவும் தத்துரூபமாக காட்டியிருப்பது இந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறது.

சித்தார்த் மல்ஹோத்ரா  தனது கதாபாத்திரத்தை மிகவும் மிடுக்காக நடித்து கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தை படமாக்கிய விதம் மிகவும் அருமையாக உள்ளது.

 தல அஜித்தை வைத்து 2007ஆம் ஆண்டு விழா  பில்லா திரைப்படத்தையும் அதன்பின் ஆரம்பம் என்ற திரைப்படத்தையும் இயக்கிய இயக்குனர் இவர்தான் இந்த இரண்டு படங்களும் பெருமளவு வெற்றியை அஜித்துக்கு பெற்றுத்தந்தது.

மீண்டும் அஜீத்தை வைத்து ஒரு படத்தை இயக்கி ஒரு மாபெரும் வெற்றியை தர வேண்டும் என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் நினைத்துக் கொண்டிருக்கிறார். எனினும் அதற்கான சந்தர்ப்பம் எதுவும் கிடைக்கவில்லை . எனினும் அந்த சந்தர்ப்பத்தில் இன்னும் அவர் பொறுமையாகக் காத்திருப்பது பின் பாலிவுட் சென்று அங்கு பெருமளவு வெற்றியை குவித்து இருப்பது இவரின்  உழைப்பின் சிறப்பைக் காட்டுகிறது.

அஜித்தும் இவர் பாலிவுட்டில் சிறந்த இயக்குனராக விருது பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பது இவரது உறவு இன்னும் நீடித்து இருப்பதை உறுதி செய்வது போல் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் இருவரும் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவார்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

இதற்கான வாய்ப்பை நிச்சயம் கடவுள் வழங்குவார் என்ற நம்பிக்கையில் அஜித்தும், விஷ்ணுவர்தன் உள்ளதால் நிச்சயமாக இவர்களின் கனவு பலித்து தமிழ் திரையுலகில் ஒரு மிகச்சிறந்த படம் அமையும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …