ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

அத்தோடு இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை..

கொலை வழக்கில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் தற்போது வெளி வந்துள்ளது. அந்த வகையில் இந்த படுகொலையானது திட்டமிட்ட படுகொலையாக உள்ளது.

 மேலும் ஆம்ஸ்ட்ராங்கை ஐந்து முறை கொலை செய்ய திட்டம் தீட்டி போதுமான ஆட்கள் இல்லாத காரணத்தால் கைவிடப்பட்ட நிலையில் தற்போது படுகொலை செய்திருக்கிறார்கள்.

இந்த கொலை ஆனது ரவுடி ஆற்காடு சுரேஷை கொன்றதற்கு பழிக்கு பழிவாங்க நடந்த கொலை என ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ஆற்காடு பாலா காவல்துறையிடம் வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

இந்த கொலையை செய்வதற்காக சுமார் ஒரு வருடம் காத்திருந்ததாக போலீசாரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து இருக்கக்கூடிய ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலா சொல்லி இருக்கிறார்.

இதுவரை 11 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் zomato ஃபுட் டெலிவரி செய்யக்கூடிய நபர்கள் போல வேடமிட்டு வந்து சம்மந்தப்பட்ட அவர்களின் கவனத்தை திசை திருப்பி இந்த கொலையை திட்டமிட்டு செய்திருக்கிறார்கள்.

வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

மேலும் இந்த கொலை பற்றி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் பேசும் போது இரவு 7 மணி போல தெருவில் சத்தம் கேட்டது. முதலில் வேறு எங்கோ சட்டம் சத்தம் கேட்கிறது என்று நினைத்தேன். அடுத்த நொடியை அண்ணா ஓடி வாங்க உங்க தம்பிய வெட்டுறாங்க என்ற சத்தம் கேட்டது.

நானும் உடனே என் தம்பியை காப்பாற்ற ஓடி வரும் போது மூன்று பேர் என்னை நோக்கி ஓடி வந்தாங்க முதலில் வந்த நபர் அரிவாளால் என்னை வெட்ட முயற்சி செய்த போது நான் குனிந்து கொண்டு தப்பிவிட்டேன். பிறகு இரண்டாவது முறையும் வெட்டும் போது நான் தப்பினேன்.

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

இதை அடுத்து மீண்டும் அவர்கள் என்னை தாக்க முயற்சி செய்த போது மூன்றாவது நபர் என்னை அரிவாளால் தலையில் வெட்டினார். மேலும் மற்றொருவர் என் முதுகில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

 எனக்கும் ரத்தம் வந்தது ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஆம்ஸ்ட்ராங்கை பிடித்து எழுந்திருப்பார் என்று பேசினேன் ஆனால் சத்தம் தான் கொடுத்தார்.ரத்தம் அதிகமாக வந்துவிட நானும் மயங்கி விட்டேன் பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை என கூறினார்.

தமிழகமே பரபரப்பில்..

அத்துடன் கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடந்த விசாரணை அடுத்து ஆற்காடு சுரேஷ் இறந்த நாளில் இருந்தே ஆம்ஸ்ட்ராங்குக்கு ஸ்கெட்ச் போடப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து ஐந்து முறை அவரை போட்டுத் தள்ள ஆபரேஷன்கள் நடந்து உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் போதுமான ஆட்கள் இல்லாத காரணத்தால் கொலை செய்யும் முயற்சியை தள்ளிப் போட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

ஆற்காட்டு சுரேஷின் பிறந்தநாள் என்பதால் போதுமான ஆட்களை திரட்டி கொண்டு எப்படியும் இன்று முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தெரிவித்துள்ளனர். 

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

இந்நிலையில் கட்டுமான பணி நடைபெறுவதால் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பணியை பார்வையிட ஆம்ஸ்ட்ராங் வருவதை அறிந்து கொண்டு சதி திட்டம் தீட்டி வேலையை முடித்து விட்டார்கள்.

இப்போது கைது செய்யப்பட்ட நபர்களை காவலில் எடுத்து விசாரணை செய்ய செய்து வரக்கூடிய வேளையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாக பலரும் பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.