என் காசுல சீட்டு விளையாடுவான்.. ஆனா, என் புள்ளைக்கு.. வடிவேலுவின் மறுபக்கத்தை காட்டிய கஞ்சா கருப்பு..!

என் காசுல சீட்டு விளையாடுவான்.. ஆனா, என் புள்ளைக்கு.. வடிவேலுவின் மறுபக்கத்தை காட்டிய கஞ்சா கருப்பு..!

நடிகர் கஞ்சா கருப்பு வெள்ளந்தியான மனிதர் என்பது அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தாலே, எதிரில் இருப்பவர்களுக்கு தெரிந்துவிடும். சினிமாவை போலவே, நிஜத்திலும் அவர் அப்பாவியாக தான் இருந்திருக்கிறார் என்பதை பல விஷயங்களை கூறும்போது வெளிப்படையாகவே தெரிகிறது.

பிதாமகன் படத்தில் கஞ்சா கொடுக்கிய சில காட்சிகளில் வருவார். சிம்ரனிடம், சிங்கப்பூர் துபாய் போய்ன்னு போய் கண்ட பயலுக முன்னாடி ஆடறே, நம்ம தாய்புள்ள சொந்தங்கள் முன்னாடி ஆட மாட்டியா, என அழுதபடி கேட்பார். அடுத்து பருத்திவீரன், ராம் படங்களின் வாயிலாக கஞ்சா கருப்புவின் வாழ்க்கை தரத்தை வேற லெவலில் மாற்றிவிட்டார் இயக்குநர் அமீர். இந்த படங்களில் கஞ்சா கருப்பு காமெடி தரமான சம்பவமாக இருக்கும்.

நடிகர் வடிவேலு குறித்து சர்ச்சைகளும், விமர்சனங்களும் சமீபமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் குறித்து தரக்குறைவாக விமர்சித்த காலகட்டத்தில் இருந்தே, வடிவேலுவின் சரிவு காலம் ஆரம்பமாகி விட்டது. 10 ஆண்டுகள் இடைவௌிக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலுவை ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை.

இதுததவிர அவருடன் காமெடி காட்சிகளில் துணை பாத்திரங்களாக நடித்த முக்கிய நடிகர்கள் பலரும் வடிவேலுவின் குணங்களை, அவரது தவறான நடவடிக்கைகளை அம்பலமாக்கி வருகின்றனர். தன்னுடன் இருக்கும் காமெடி நடிகர்களை வளரவிடாமல் அவர் செய்த சதி திட்டங்களை எல்லாம் பகிரங்கப்படுத்தி, வடிவேலுவை சந்திக்க சிரிக்க வைத்துவிட்டனர்.

சக நடிகரான கஞ்சா கருப்புவும், வடிவேலு குறித்த பல விஷயங்களை ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். நான் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த பொழுது பல பள்ளிகளுக்கு உதவி செய்திருக்கிறேன். வடிவேலு என்னுடைய காசை வைத்து சீட்டு விளையாடி இருக்கிறான். ஆனால் அவன் பணம் சம்பாதித்த போது யாருக்கும் உதவவில்லை. தற்போது அவன் சந்தோஷமாக இருக்கிறான். அதற்கு காரணம், மற்றவர்களுக்கு ஒரு டீ வாங்கி கூட தரமாட்டான்.

யார் வீட்டுக்கு அவர்களை பார்க்க போனாலும், திரும்பி வரும்போது வாசல்படியருகே நின்று, கார் பெட்ரோல் செலவுக்கு ரூ. 1500 ரூபாய் வாங்கிவிட்டுதான் வருவார். நான் பணம் இருக்கும் போது பலருக்கு உதவிய இப்போது என்னுடைய பிள்ளைக்கு பீஸ் கட்ட முடியவில்லை. பிள்ளையை ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இரண்டே மாதத்தில் எப்படியும் பீஸை கட்டி விடுகிறேன் என்று கெஞ்சி வாய்தா வாங்கி இருக்கிறேன் என வேதனையாக சொல்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு.