மகன் செய்த வேலை.. வீட்டுக்கே வந்த போலீஸ்.. சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் கண்ணீர்..!

தமிழ் சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவராக நடிகை காயத்ரி யுவராஜ் இருந்து வருகிறார். தமிழ் சின்னத்திரை உலகில் வெகு காலங்களாக பயணித்து வரும் நடிகையாக இவர் இருந்து வருகிறார்.

பொதுவாக சீரியல்களிலும் இப்பொழுது எல்லாம் நடிகைகளாக நடிப்பதில் நிறைய போட்டிகள் உருவாகி இருக்கின்றன. அதனால் கதாநாயகிகளாக நடிக்கும் பல நடிகைகள் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க முடிவதில்லை சில காலங்களிலேயே அவர்கள் சினிமாவில் இருந்து காணாமல் போய் விடுகின்றனர்.

முக்கியமாக ஒரு சீரியலில் நடிக்கும் நடிகைகளை இன்னொரு சீரியலில் பார்ப்பதே கடினமாக இருக்கிறது உதாரணத்திற்கு எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மதுமிதா அதற்குப் பிறகு இன்னும் ஒரு சீரியலில் கூட நடிக்கவில்லை.

சின்னத்திரையில் போட்டி:

ஆனால் எதிர்நீச்சல் சீரியல் ஏற்கனவே முடிந்து விட்டது. இப்படி போட்டிகள் இருந்த போதும் கூட தொடர்ந்து சின்னத்திரையில் தனக்கான இடத்தை பிடித்து நடித்துக் கொண்டிருக்கிறார் காயத்ரி யுவராஜ். 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் வெளியான தென்றல் தொடரில்தான் முதன் முதலாக இவர் அறிமுகமானார்.

---- Advertisement ----

அந்த தொடரில் இருந்து அவருக்கு அதிகமான சன் டிவி தொடர்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து அழகி என்கிற சீரியலிலும் நடித்தார் காயத்ரி யுவராஜ். போன வருடம் வரை தமிழில் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ்.

சரவணன் மீனாட்சி தொடரில் நடந்து நடித்ததன் மூலமாக விஜய் டிவியில் இவர் பிரபலம் அடைந்தார். ஒரு முறை விஜய் டிவியில் பிரபலமடைந்துவிட்டால் அதில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் கிடைக்கும்.

விஜய் டிவியில் பிரபலம்:

அந்த வகையில் மிஸ்டர் மிஸ்ஸஸ் கில்லாடி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை மாதிரியான நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. திருமணமான நிலையில் கூட தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ்.

இந்த நிலையில் தனது பையனால் போலீஸ் வந்த நிகழ்வு குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசியிருக்கிறார். ஒருமுறை ஒரு நபருக்கு google pay செய்யும் பொழுது மாற்றி அந்த நபருக்கும் பதிலாக வேற எண்ணை போட்டு வட இந்தியாவில் இருக்கும் யாருக்கோ பணத்தை அனுப்பிவிட்டார்.

இந்த நிலையில் விஷயம் தெரிந்த காயத்ரியின் மகன் அந்த நபருக்கு போன் செய்து பேசியிருக்கிறார். ஆனால் ஹிந்தியில் பேசிய அந்த நபர் என்னவென்று புரியாமல் ஃபோனை வைத்து விட்டார். இதனால் கோபமடைந்த அவரது மகன் பிறகு 100க்கு போன் செய்து போலீசை அழைத்திருக்கிறார்.

இந்த விஷயம் வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியாது இந்த நிலையில் கொஞ்ச நேரத்தில் போலீசும் வீட்டிற்கு வந்திருக்கிறது பிறகு அந்த சிறுவன் செய்த செயலுக்காக அவரரை பாராட்டிவிட்டு போலீஸ் சென்று இருக்கிறது. இந்த விஷயத்தை காயத்ரி யுவராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

---- Advertisement ----