நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கின் திருமணத் தேதி பற்றி மாஸான தகவல்…!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!

ஏற்கனவே பல நாட்களாக ஒரு வதந்தி திரையுலக வட்டாரத்தில் நிலவி வந்தது அது நடிகர் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவருமே காதலித்து வருகிறார்கள் என்பதுதான்.

இந்தக் காதலை உறுதி செய்யும் விதத்தில் ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு இவர்கள் ரசிகர்கள் மத்தியில் காதலை உறுதி செய்தார்கள்.

 நடிகையான மஞ்சிமா மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் ஹீரோயினியாக முதல் முதலில் நடித்தவர். இவர் நடித்து வெளிவந்த முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தது.

 இதனைத் தொடர்ந்து இவர் சத்ரியன், இப்படை வெல்லும் போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார் இருந்தாலும் இவர் எதிர்பார்த்த ஆதரவு இந்த படத்துக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து மஞ்சிமா மோகன் கவர்ச்சியை அதிக அளவு கையில் எடுத்து ஆளாமல் குறிப்பிட்ட வேடங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார்.

 அதுபோலவே நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் 2019 ஆம் ஆண்டு தேவராட்டம் என்ற படத்தில் நடித்த போது அவருக்கு ஜோடியாக மஞ்சிமா நடித்திருந்தார்.

 அப்போதுதான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த காதல் கசிந்து பலராலும் பேசப்பட்ட நிலையில் அமைதியாக இருந்த இவர்கள் தற்போது தான் அந்த காதலை உறுதிப்படுத்த கூடிய புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்தனர்.

 இதனை அடுத்து இரண்டு வீட்டு சார்பிலும் இவர்களது காதலை ஏற்றுக் கொண்டு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருப்பதாக பெற்றோர்கள் தரப்பு கூறியுள்ளார்கள்.

 மேலும் திருமணம்  இந்த மாதம் 28ஆம் தேதி நடக்கலாம் என்ற செய்தி வர இணையதளத்தை தற்போது வைரலாகி வருகிறது. இந்த திருமணத்தில் இவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள போவதாக உள்ளது.

 இதனை அடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அதில் திரை உலகை சேர்ந்த பல முன்னணி பிரமுகர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்ற விஷயமும் கசிந்துள்ளது.

 இந்நிலையில் இந்த திருமணம் பற்றி மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில் விரைவில் அந்த தகவல் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version