பிரம்மாண்ட முறையில் நடந்த ஹன்சிகாவின் திருமணம் பார்க்க பல கோடி கண்கள் வேண்டும்…!!

 தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இருந்தவர்தான் ஹன்சிகா மோத்வானி. இவரை அனைவரும் அன்புடன் சின்ன குஷ்பு என்று அழைத்து வந்தார்கள்.

இவர் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதின் மூலம் அடுத்தடுத்து தமிழ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்ததோடு முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

அந்த வரிசையில் சிவகார்த்திகேயனோடு நடித்து  டார்லிங் டம்பக்கு என்ற பாடலுக்கு நடனமாடிய விதத்தைப் பார்த்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரை லைக் செய்யாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ரசிகர்களின் வட்டாரத்தை அதிகப்படுத்தி கொண்டார்.

 இவர் சமீபத்தில் தனது பிசினஸ் பார்ட்டனரான  சோஹைல் கத்தூரியா என்பவரை காதலிப்பதாக அறிவித்தார். இதனை எடுத்து இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் உள்ள முன்டோட்டா கோட்டை மற்றும் அரண்மனையில் சிந்தி முறைப்படி மிகப் பிரமாண்டமாக நடந்தது.

இந்த திருமணத்தில் ஹன்சிகா சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருந்தார். சோஹைல் கோல்டன் நிறத்திலான சர்வாணியை அணிந்து கலக்கி இருந்தார். திருமணத்திற்கு மணமக்களின் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும்தான் கலந்து கொண்டார்கள்.

மேலும் திருமணத்தின் போது வான வேடிக்கை ஆட்டம், பாட்டம் என்று எதற்கும் குறை வைக்காமல் மிகப் பிரமாண்டமான முறையில் இவரது திருமணம் நடந்தேறியது. இது தொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

 அது மட்டுமல்லாமல் திரை உலகினைச் சார்ந்தோரும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தற்போது பகிர்ந்து வருகிறார்கள். இதை எடுத்து ஒரு வழியாக ஹன்சிகா காட்டில் மழை பெய்து விட்டது என்று கூறலாம். ரசிகர்கள் அனைவரும் ஒரு விதமான சோகத்தில் இருப்பது அவருக்கும் தெரியும்.

 திருமணத்துக்குப் பிறகு இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பாரா? இல்லை மற்ற நடிகைகளை போல குடும்பம் குட்டி என்று செட்டில் ஆகி விடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version