மன அழுத்தம் நீங்க வேண்டுமா..? இதோ எளிமையான வழி..!

வணக்கம் என் பெயர் முத்துக்குமார். தமிழகம் தளத்தில் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த பதிவில் மன அழுத்தம் நீங்குவதற்கான ஒரு ஆரோக்கிய குறிப்பை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்றைய வாழ்வியல் மற்றும் பணிச்சுமை பலருக்கு மன அழுத்தத்தை உண்டு பண்ணியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம், சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது தான்.

இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழித்திருப்பது… இரவு நேரங்களில் சாப்பிடுவது.. அதிலும் சமீப காலமாக நள்ளிரவு இரண்டு மணிக்கு பிரியாணி போன்ற கடைகள் எல்லாம் வியாபார நோக்கத்திற்காக திறக்கப்பட்டு விற்பனை படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

சூரியன் மறைந்த பிறகு உணவு உண்ணும் பழக்கத்தை எப்போது ஒருவர் தவிர்க்கிறாரோ அப்போதிலிருந்து அவருடைய உடல் நலம் மேம்பட போகிறது என்று அர்த்தம். அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு மணிக்கு சாப்பிட்டு விடுவது சிறந்தது.

இந்த அதிகபட்ச நேரமே அதிகம் தான். இன்று மாறிவிட்ட வேலை சூழல்தான் இந்த மாற்றத்திற்கு காரணம். வேலைக்கு சென்றால் 6 மணிக்கு தான் வீட்டுக்கு வர முடியும். வந்த பிறகு சமைத்து உண்பதற்கு கண்டிப்பாக நேரம் எடுக்கும். அதன் காரணமாக மட்டுமே ஏழு அல்லது எட்டு மணிக்கு சாப்பிடுவது சிறந்தது என கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

ஆனால், சூரியன் மறைவதற்கு முன்பே 6 மணிக்கு தங்களுடைய இரவு உணவை முடித்து விட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் மன ஆரோக்கியமும் மேம்படும்.

இதற்கு அறிவியல் ரீதியான காரணம் என்ன என்று பார்த்தால். நம் உடலில் உணவை செரிமானம் செய்யக்கூடிய பான்கிரியாஸ் ( Pancrea ) என்ற உறுப்பு சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் குறைவாக வேலை செய்யும்.

அந்த நேரத்தில் நாம் உணவை எடுத்துக் கொள்ளும் பொழுது செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும். அதிக நேரம் செரிமானமாக எடுக்கும் பொழுது நிம்மதியாக தூங்குவது என்பது இயலாத காரியம். அப்படியே அவர் தூங்கினாலும் அவர் மயக்கத்தில் இருக்கிறார் தான் என்று அர்த்தமே தவிர தூங்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இப்போது விஷயத்துக்கு வருவோம். மன அழுத்தத்தை போக்குவதற்கு அஸ்வகந்தா மூலிகை எப்படி பயன்படுகிறது..? அதனை எந்தெந்த வகைகளில் நாம் எடுத்துக் கொள்ளலாம்..? எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்..? இதனால் ஏற்படும் பயன்கள் என்ன..? என்பதை பற்றி தொடர்ந்து விரிவாக பார்ப்போம்.

அஸ்வகந்தா பயன்கள் என்ன..?

அஸ்வகந்தாவில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்பு அதிகமாக இருக்கிறது. இது உடலில் சேரும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகின்றது. மட்டுமில்லாமல் இரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய அடைப்பு மற்றும் கார்டியாக் கரஸ்ட் என்று சொல்லப்படக்கூடிய இதய தடுப்பு போன்ற  பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைக்கின்றது. மேலும், குறிப்பிட்ட கேன்சர் நோய்கள் வரமாலும் பாதுகாக்கிறது.

அஸ்வகந்தா என்றால் என்ன..?

இந்த அஸ்வகந்தா இன்று நேற்று பிரபலமாகவில்லை. கடந்த 6000 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படக்கூடிய பழமையான மூலிகை பொருட்களில் ஒன்று இந்த அஸ்வகந்தா.

சமீப காலமாக உடற்பயிற்சி செய்பவர்கள் உடலை மெருகேற்ற முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள். இந்த அஸ்வகந்தாவை விரும்பி சாப்பிடுகின்றனர். என்ன காரணம் என்றால்.. இதனை எடுத்துக் கொள்ளும் பொழுது நிம்மதியான உறக்கத்தை பெற முடியும்.

உடலை கட்டுமஸ்தாக மாற்றுவதற்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ..? அதே அளவு தூக்கமும் முக்கியம்..! சரியான தூக்கம் இல்லாமல் உடற்பயிற்சி மட்டும் செய்து கொண்டிருந்தால் அவர் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்த அஸ்வகந்தாவின் வேர்கள் மற்றும் பழங்கள் ஆகியவை பல்வேறு மருத்துவ குறிப்பில் முக்கிய மூலப்பொருளாக இருக்கின்றது.

அஸ்வகந்தா என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியில் இருந்து பெறப்பட்டது. இதனுடைய பொருள் குதிரை மற்றும் வாசனை என்பதாகும். சித்த மருத்துவ கடைகளில் அஸ்வகந்தா பொடி உங்களால் பெற முடியும்.

ஆங்கில மருந்து கடைகளிலும் கூட தற்போது இதனை பொடியாக விற்பனை செய்கிறார்கள். மட்டுமில்லாமல் இதனை பயன்படுத்துவதற்கு எளிமையான மாத்திரை மற்றும் கேப்சூல் வடிவிலும் கிடைக்கின்றது.

அஸ்வகந்தாவை எந்த நேரத்தில் எடுக்க வேண்டும்..?

உங்களுக்கு எது வசதியோ அதனை வாங்கி நீங்கள் பயன்படுத்தி பயன்பெறலாம். எந்த நேரத்தில் அஸ்வகந்தாவை எடுக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கும்.

குறிப்பிட்ட நேரத்தில் அஸ்வகந்தாவை எடுக்க வேண்டும் என்ற எந்த ஒரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. இரவு உணவு முடித்த பிறகு ஒரு அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்வது நல்ல தூக்கத்திற்கும் மன அழுத்தத்திற்கும் சிறந்த மருந்தாக அமைகிறது.

காலை உணவுக்கு பிறகு எடுத்துக் கொண்டால் உடலில் பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கு இது பயன்படுகிறது. சிலர் காலை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் இரவு மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள்.

எந்த நேரத்தில் எடுத்தால் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கிறது என்பதை பொறுத்து நீங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒரு வாரத்திற்கு காலை நேரத்தில் எடுக்கிறீர்கள்.. அடுத்த வாரம் இரவு நேரத்தில் மட்டும் எடுங்கள்.. இந்த இரண்டு வாரத்திலும் எந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதை பார்த்து அதற்கேற்றார் போல காலையிலா அல்லது இரவிலா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை குறைப்பதற்கும் உறுதுணையாக இருக்கிறது. மேலும், சருமம் முடி பிரச்சனைகளுக்கும் நல்ல ஒரு உறுதுணையாக இருக்கிறது.

முக்கியமாக மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றால் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நபர்களுக்கு இந்த அஸ்வகந்தா மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறலாம். மனஅழுத்தம், பதட்டம் போன்ற விஷயங்களில் இருந்து அஸ்வகந்தா மிகப்பெரிய பாதுகாப்பை அளிக்கிறது.

இப்படியான பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் தினம் தோறும் காலை அல்லது இரவு ஏதாவது ஒரு நேரத்தில் இந்த அஸ்வகந்தாவை தொடர்ச்சியாக எடுத்து வர வேண்டும். அப்படி எடுத்து வரும் பொழுது இரண்டு முதல் மூன்று மாதங்களில் அவர்கள் மன இறுக்கம் குறைந்து நல்ல தெளிவான சிந்தனையில் பயணிப்பதை அவர்களால் உணர முடியும்.

அஸ்வகந்தா உபயோகிப்பது எப்படி..?

பைட்டோ மெடிசின் என்ற இதழ் நடத்திய ஆய்வில் அஸ்வகந்தா மன அழுத்தத்தை குறைக்கிறது என்பதை நிரூபணம் செய்திருக்கிறார்கள். அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்வதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன.

நீங்கள் பொடியாக எடுத்துக் கொள்ளலாம், பொடியாக எடுத்துக் கொள்ளும் பொழுது பாலில் கலந்து அல்லது தண்ணீரில் கலந்து எடுத்துக் கொள்ளலாம். மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ளலாம், கேப்சூல் வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.

பல்வேறு நிறுவனங்கள் இன்று இந்த அஸ்வகந்தாவை தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கின்றன. எந்த நிறுவனத்தின் மாத்திரைகளை வாங்குவது என்பது உங்கள் முடிவு. வழக்கமாக பொருட்களை வாங்கும் போது எப்படி ஆன்லைனில் ஏற்கனவே வாங்கியவர்களின் ரிவ்யூவை பார்த்து வாங்குகிறீர்களோ.. அதுபோல நல்ல ரிவ்யூ இருக்கக்கூடிய நல்ல ஸ்டார் ரேட்டிங் இருக்கக்கூடிய அஸ்வகந்தா மாத்திரைகளை தாராளமாக நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம்.

இதனை யார் பயன்படுத்தக்கூடாது..?

அஸ்வகந்தா வை சிலர் பயன்படுத்தக் கூடாது என பிறந்திருக்கப்படுகிறது அதன்படி கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தன்னுடல் தாக்கு நோய்கள் உள்ள நபர்கள் உதாரணமாக லூபஸ், முடக்குவாதம், வகை 1 நீரிழிவு நோய் மற்றும் ஹார்மோன் சென்சிடிவ் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ளவர்கள் அறுவை சிகிச்சை திட்டமிட்டு குறிப்பிட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு அஸ்வகந்தா எடுப்பதை நிறுத்த வேண்டும். மட்டுமில்லாமல் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் அஸ்வகந்தாவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.