சிறுதானியங்களில் சிறந்த தானியமாக திகழும் சாமை அரிசி அதிக அளவு நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.
samaiமேலும் இந்த அரிசியை சாப்பிடுவதின் மூலம் ஆமை வயது கிடைக்கும் என்ற ஒரு பழமொழியும் நிலவுகிறது. நீங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் கட்டாயம் இந்த சாமை அரிசியை சாப்பிடுவது மிகவும் நல்லது. அப்படிப்பட்ட சாமை அரிசியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சாமை அரிசியில் அதிக அளவு மெக்னீசியம் நிறைந்துள்ளது. மெக்னீசியமானது இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஊட்டச்சத்தை என்பதால் இதை உட்கொள்வதின் மூலம் உங்களுக்கு இடை ஆரோக்கியம் அதிகரிப்பதோடு கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க இதில் இருக்கும் நியாசின் என்ற சத்து உதவி செய்யும்.
samaiஇரும்புச்சத்து அதிகம் இருக்கக்கூடிய சாமை அரிசியை பெண்கள் அதிக அளவு எடுத்துக் கொள்வதின் மூலம் ரத்த சோகை பாதிப்பிலிருந்து விடுதலை பெறுவதோடு ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகமாக கூடிய தன்மை இதற்கு உள்ளது.
எலும்பு தேய்மானத்தை தடுக்கக்கூடிய சக்தி சாமைக்கு உள்ளது. ஏனெனில் இதில் கால்சிய சத்து அதிகமாக உள்ளதால் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்து உங்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் பல்லை பலமாக்க உதவி செய்கிறது.
samaiசாதாரண அரிசியை விட இதில் ஏழு மடங்கு நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். இதை அவர்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய மாங்கனிசு சத்து இதில் அதிக அளவு காணப்படுகிறது. இதன் மூலம் உங்கள் ரத்த அழுத்த நோய்க்கு இது தீர்வாக அமைகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் ஆற்றல் எந்த சாமை அரிசிக்கு உள்ளது.
உடலில் இருக்கும் பித்தத்தை தனித்து வாந்தி, குமட்டல், மயக்கம் போன்ற பித்த நோய்கள் வராமல் பாதுகாக்க கூடிய சக்தி உள்ளது. மேலும் இதில் குளேட்டோன் இல்லாத காரணத்தால் அனைத்து வயதினரும் இதை சாப்பிடுவதால் நல்ல நன்மைகளை பெற முடியும்.