வயிறு உப்புசம்.. நெஞ்செரிச்சல்.. பிரச்சனையா..? இதை பண்ணா உடனே குறைச்சிடும்..!

துரித உணவுகளை உண்பதாலும் நேரம் கெட்ட நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் வயிற்றில் உப்புசம் ஏற்பட்டு ஒரு விதமான அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற சூழ்நிலை இன்று சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது.

அது போன்ற சூழ்நிலையில் உங்கள் வயிறு சற்று வீங்கியது போன்ற ஒரு விதமான உணர்வு உங்களுக்குள் ஏற்படும். மேலும் அந்த வீக்கம் குறைந்தால் தான் உங்களால் எதையும் எளிதில் செய்ய முடியும்.

வயிறு உப்பசம் நெஞ்செரிச்சல் பிரச்சனை..

வயிறு உப்புசம் ஆக மாறுவதால் சிலருக்கு நெஞ்சு எரிச்சல் பிரச்சனைகளும் ஏற்படுவது உண்டு. அப்படி ஏற்படுகின்ற பிரச்சனைகளை எளிதில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே சரி செய்ய முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆனால் அது உண்மை தான். உங்கள் வீட்டில் இருக்கும் இஞ்சியை நீங்கள் அதிகமாக உணவில் சேர்ப்பதின் மூலம் ஜீரண மண்டலத்தை இது பாதுகாப்பதோடு வயிற்றை இதமாக வைத்துக்கொள்ள இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரால் என்ற பண்பு உதவி செய்யும்.

எனவே நீங்கள் இஞ்சியை டீயாகவோ, சாறாகவோ எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் வயிற்றில் ஏற்பட்டிருக்கும் வயிறு உப்புசம் உடனடியாக குறைய கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதுபோலவே யோகர்ட் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கலாம். இதில் ப்ரோ பயோடிக் பண்புகள் அதிக அளவு  நிறைந்துள்ளதால் அனைவருக்கும் ஏற்ற பொருளாக கருதலாம். எனவே தினமும் யோகர்ட் சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு குடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வயிறு உப்புசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நெஞ்செரிச்சல் இருக்கும் சமயத்தில் கூட ஒரு கப் யோகார்ட் சாப்பிட்டால் வயிறு உப்புசம் குறைந்து நெஞ்செரிச்சலும் தணிந்து விடும்.

இந்தப் பழங்கள் கூட வயிறு உப்புசத்தை குறைக்குமா..

வாழைப்பழத்தை அதிக அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் உடலுக்கு தேவையான நீர் சத்தையும் கொண்டிருப்பதால் உடலில் நீர் கோர்ப்பதை தடுத்து வயிற்று உப்புசத்தை கட்டுப்படுத்தும்.

அது போலவே பப்பாளி பழத்தில் உள்ள பபைன் எனும் என்சைம் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நார்ச்சத்து போன்றவை அதிக அளவு இருப்பதால் இது ஜீரண சக்தியை துரிதப்படுத்தி உணவுகள் முழுவதையும் உடைத்து குடல் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உங்கள் வயிற்று உப்புசம் எளிதில் குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இத பண்ணா உடனே குறைஞ்சிடும்..

வெள்ளரிக்காயில் 90 சதவீதத்திற்கும் மேல் நீர் சத்து இருப்பதால் இது நார் சத்தும் அதிக அளவு காணப்படுகிறது.மேலும் இருக்கக்கூடிய ஆன்ட்டி இன்ஃப்லமென்டரி பண்புகள் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீரை வெளியேற்றக் கூடிய பணியை செய்வதால் உடலில் தேங்கி இருக்கும் உப்புசத்தை நீக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

அடுத்து பெருஞ்சீரகம் எனும் சோம்பினை நீங்கள் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் வயிற்று உப்புசம், வாயு தொல்லை போன்றவை நீங்கும். இந்த சோம்பினை நீங்கள் உணவோடு அல்லது டீயாகவோ வைத்து பருகுவதின் மூலம் அனைத்து விதமான குடல் சார்ந்த நோய்களும் குணமாகும்.

எனவே வயிறு உப்புசமாக இருக்கிறது. நெஞ்சு எரிச்சலாக உள்ளது என்பவர்கள் உடனடியாக வீட்டில் இருக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி உங்கள் வயிற்று உப்புசத்திற்கு நெஞ்சு எரிச்சலுக்கும் தீர்வு காணலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam