உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கல்லீரல் பாதிப்பு.. உயிருக்கே ஆபத்துன்னு அர்த்தமாம்..! உஷார்..!

இன்று உள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதனும் கல்லீரலை பாதுகாப்பது மிகவும் கட்டாயமான ஒன்றாக மாறி வருகிறது. கல்லீரல் பாதிப்பால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படும்.

மேலும் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. இதில் எந்த ஒரு உறுப்பு பழுதடைந்தாலும் அதிகளவு பாதிக்கப்படும் மனிதர்கள் ஒவ்வொரு உறுப்பையும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

கல்லீரல் பாதிப்பு..

கல்லீரல் பாதிப்படைவதால் ஹெப்பாக்டீஸ் என்ற வீக்கம் கல்லீரலில் ஏற்படும். இந்தக் கல்லீரல் மூலம் தான் புரத தொகுப்பு மற்றும் செரிமானம் உள்ளிட்ட பல முக்கிய செயல்பாடுகள் மிகச் சிறப்பான முறையில் நடை பெற்று வருகிறது.

கல்லீரல் வீக்கத்தால் இந்த செயல்பாடுகளில் குறைய ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் சில வைரஸ் தொற்றுகள், அதிகப்படியாக மது அருந்துதல், தேவையில்லாமல் மருந்துகளை எடுத்தல் போன்றவை கல்லீரலை பாதிக்க கூடிய காரணிகளாக விளங்குகிறது.

கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகள்..

மஞ்சள் காமாலை அல்லது வயிற்று வலி போன்றவை பொதுவான அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. சில சமயம் உங்கள் கண்கள் மஞ்சள் நிறத்திலும் வெளியேறும் சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மேலும் இரவு நேரங்களில் உங்கள் கல்லீரல் செயல்பாட்டில் பிரச்சனை இருந்தால் பாதங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே இரவு நேரங்களில் இது போன்ற வீக்கம் அதிகமாக காணப்பட்டு அது சரியாகவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை செய்து கொள்வது மிகவும் நல்லது.

அதுபோல இரவு நேரத்தில் உங்கள் பாதத்தில் அதிகபட்சமாக வலி ஏற்படும் இந்த வழி கடுமையாக இருந்தால் அது கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு இருக்கலாம். மேலும் சில சமயம் வலி நிரந்தரமாகவும் இருக்கும்.

சில பேர் தோல் நிறம் மாற்றம் அடையும். கை மற்றும் கால் பகுதிகளில் அசாதாரணமான மாற்றங்கள் தோன்றுவதை நீங்கள் கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.

கல்லீரல் பிரச்சனை காரணமாக உங்கள் தோல் கருமையாகும் அல்லது மஞ்சள் நிறமாக மாறும். இதன் மூலம் ஹெப்பாகிட்டீஸ் உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனால் இரவு நேரங்களில் கால் பிடிப்புகள் தசைப்பிடிப்புகள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் நிலையானது மோசமாகும். இதனால் உங்கள் கால்களை நகர்த்துவதற்கான கட்டுப்பாட்ட நிலையில் நீங்கள் உணரலாம்.

உயிருக்கே ஆபத்தான அர்த்தமாம்..

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கு உரிய தீர்வினை பெற வேண்டும். இல்லையென்றால் இது உயிருக்கே ஆபத்தான நிலைக்கு கொண்டு போய் விடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எனவே இனிமேல் கல்லீரல் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் கல்லீரல் பாதிக்கப்படுவதால் என்னென்ன தீமைகள் நமக்கு ஏற்படும். அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்பதை நாங்கள் நம்புகிறோம்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையங்களில் அதிக அளவு படிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கல்லீரலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளக் கூடிய விழிப்புணர்வு பதிவாக உள்ளது என்று சொல்லலாம்.