“அடிக்கடி மூக்கு அடைக்குதா..!” – நொடியில் மூக்கடைப்பு நீங்க மருத்துவ குறிப்புகள்..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கின்ற பெரிய பிரச்சனைகளில் இந்த மூக்கடைப்பு பிரச்சனையும் ஒன்றாக உள்ளது. மூக்கடைப்பு ஏற்பட்டு விட்டால் எளிதில் சுவாசிக்க முடியாமல் திண்டாடுவார்கள்.

MUKKU ADAIPPU

 இந்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வரும் இவர்களுக்கு வீட்டில் இருந்தே சில சின்ன, சின்ன வைத்தியங்களை செய்து உங்கள் மூக்கு அடைப்பை எளிதில் குணப்படுத்த முடியும். இந்த மூக்கடைப்பை எளிதில் குணம் செய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள் விரலி மஞ்சள் எடுத்து அதன் நுனியை நல்லெண்ணெயில் முக்கி எடுத்து அதனை தீயில் லேசாக காட்டும் போது புகை வெளிவரும் இந்தப் புகையை நீங்கள் மூக்குக்கு பக்கத்தில் வைத்து முகராமல் சற்று தள்ளி வைத்து நுகருங்கள். அப்படி நுகர்வதின் மூலம் உங்கள் மூக்கடைப்பு எளிதில் சரியாகும்.

MUKKU ADAIPPU

நொச்சி இலைகள் உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தால் அந்த இலைகளை எடுத்து வந்து நன்கு கழுவி ஆவி பிடிக்கலாம். அப்படி ஆவி பிடிப்பதன் மூலம் உங்களுக்கு தலைபாரம் குறைவதோடு, மூக்கடைப்பும் நிவர்த்தியாகும்.

கடுகு எண்ணெயை இரண்டு அல்லது மூன்று துளிகள் எடுத்து கைகளில் தடவி அதை மூக்கருகை வைத்து முகர்ந்து பார்க்க வேண்டும். அவ்வாறு நீங்கள் நுகர்ந்து பார்க்கும் போது உங்களுக்கு ஒவ்வாமையின் காரணமாக மூக்கடைப்பு ஏற்பட்டு இருந்தால் எளிதில் நீங்கிவிடும்.

MUKKU ADAIPPU

மூக்கடைப்பு ஏற்படக்கூடிய சமயத்தில் இஞ்சி மற்றும் தேனை கலந்து நீங்கள் குடிப்பதின் மூலம் உங்களுக்கு மூக்கடைப்பு சில மணி நேரங்களில் நீங்கும்.  இஞ்சியை டீயில் தட்டி போட்டும் நீங்கள் குடிக்க மூக்கடைப்பு நீங்கும்.

வெது வெதுப்பான நீரோடு தேன் அல்லது பாலோடு தேனை சேர்த்து குடிப்பதன் மூலம் மூக்கடைப்பை ஓரளவு குறைக்க முடியும்.

MUKKU ADAIPPU

எனவே மேற்கூறிய குறிப்புக்களை பயன்படுத்தி மூக்கடைப்பு ஏற்பட்டால் உங்கள் வீட்டிலிருந்தே உங்கள் மூக்கடைப்பை எளிதில் நீக்க முடியும். நீங்களும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள் கட்டாயம் உங்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

Check Also

“அடிக்கடி தசைகளில் வலியா..!” – காரணம் என்ன பார்க்கலாமா..!!

தசைகளில் வலி: தசைப்பிடிப்பு நோய் இருப்பவர்களுக்கு தசை திசுக்களில் கடுமையான வலிகள் ஏற்படும். இதை இந்த தசைவலி தற்போது இளைஞர்கள் …