பிரபல நடிகர் 2 மகள்களுடன் திடீர் மரணம்!

பிரபல நடிகர் 2 மகள்களுடன் திடீர் மரணம்!

ஹாலிவுட் நடிகர் தன் இரு மகள்களுடன் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம், ஹாலிவுட் சினிமா ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது இந்த கொடூர விபத்து நடந்துள்ளது.

ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், இவருக்கு 51 வயதாகிறது. இவர் தனது மகள்களுடன் தனிவிமானத்தில் சென்ற போது கரீபியன் கடலில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அவரும், அவரது 2 மகள்களும் உயிரிழந்தனர். கிறிஸ்டியன் ஆலிவர் ஜெர்மன் வம்சாவளியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

கிறிஸ்டியன் ஆலிவர் நடிப்பில் வெளியான த குட் கார்மன், ஸ்லீடு ரேசர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் இவரது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடியதால் இவரது படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

கிறிஸ்டியன் ஆலிவர் புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். கடைசியாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில், சுற்றுலா தளம் ஒன்றில் இருந்து, புத்தாண்டு வாழ்த்துகளை தனது பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சிய வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 4ம் தேதி, தனது மகள்கள் 10 வயதுள்ள மடிதா, 12 வயதுள்ள அன்னிக்
ஆகியோருடன் பெக்வியா தீவில் இருந்து செயின் லூசியா செல்ல தனி விமானத்தில் கிளம்பியுள்ளார். விமானத்தில் அவர்கள் 3 பேருடன், விமான கேப்டனும் இருந்துள்ளார், பெக்வியா சிறிய தீவில் இருந்து விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் கரீபியன் கடலில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 4 பேருமே உயிரிழந்துவிட்டனர்.

அங்கிருந்த மீனவர்களும் , கடல் காவல் படை வீரர்களும் அவர்களது உடல்களை மீட்டனர். இந்த சம்பவம், ஹாலிவுட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.