உங்க வீட்டு இரும்பு பாத்திரம் எப்படி சுத்தம் செய்தா..!” – நோ துரு ..!

பாரம்பரியமாக அடுப்படியில் நாம் பல இரும்பு பாத்திரங்களை  பயன்படுத்தி வந்திருக்கிறோம். இந்த இரும்பு பாத்திரங்கள் நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கின்ற சிறப்பான அந்தஸ்தை பிடித்துள்ளது.

எனினும் ஆரோக்கியத்தை அள்ளி தரக்கூடிய இந்த இரும்பு பாத்திரங்களை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அது மட்டுமில்லாமல் சுத்தம் செய்த பாத்திரங்களில் துரு பிடிக்காமல் பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகவே இல்லத்தரசிகளுக்கு உள்ளது.

எனவே இந்தக் கட்டுரையில் நீங்கள் சமையல் செய்யும் இரும்பு பாத்திரங்கள் துருப்பிடிக்காமல், சுத்தமாக எப்படி பாதுகாக்கலாம் என்பதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இரும்பு பாத்திரங்களை சுத்தம் செய்யும் முறை

👍இரும்பு பாத்திரங்கள் நம்ம உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை கொடுக்க கூடிய ஆற்றல் கொண்டது.  இந்த சமையல் பாத்திரங்களை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு எண்ணெயை பூசி விட வேண்டும். இதன் மூலம் நீங்கள் எளிதில் அந்தப் பாத்திரத்தை சுத்தம் செய்ய முடியும். அதன் மூஇ துரு மிக விரைவில் பிடிக்காது.

👍நீங்கள் உங்கள் வீட்டில் இரும்பு பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்திய பிறகு சூடான நீரை ஊற்றி மென்மையான பிரசை கொண்டு சுத்தம் செய்வதின் மூலம் இரும்பு பாத்திரங்களை பாதுகாக்க முடியும்.மேலும் அதிக அளவு டிடர்ஜென்ட் மற்றும் லிக்விடை ஐ பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டாம். இதன் மூலம் எளிதில் துருப்பிடிக்கும்.

👍 நீங்கள் சுத்தம் செய்த பாத்திரங்களை அப்படியே வைக்காமல் சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி விட வேண்டும். அப்போது நீர் ஏதும் பாத்திரத்தில் தங்காமல் இருக்கும். இதன் மூலம் உங்களுக்கு  துருப்பிடித்தல் தடுக்கப்படும்.

👍சில சமயங்களில் நீங்கள் சமைத்த பிறகும் உங்கள் இரும்பு பாத்திரங்களில் கரை இருந்தால் பேக்கிங் சோடாவை போட்டு நீங்கள் சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்த பிறகு வழக்கம்போல் வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்து விடுங்கள்.

👍இரும்பு பாத்திரத்தை வைக்கின்ற இடத்தில் அதிக அளவு ஈரப்பதம் இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட இடத்தில் நீங்கள் உங்கள் பாத்திரத்தை வைப்பதின் மூலம் பாத்திரங்கள் சேதமாகாமல் துருப்பிடிக்காமலும் இருக்கும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version