அண்ணாச்சி சரவணா ஸ்டார் லெஜென்ட் சரவணன் ரொமான்டிக் ஆக்ஷன் படத்தில் நடிக்க தயாராகிறாரா?

சரவணா ஸ்டோர்ஸ் லெஜென்ட் சரவணன் ஏற்கனவே தி லெஜன்ட் என்ற ஒரு பிரம்மாண்டமான பான் இந்தியா  படத்தை தானே தயாரித்து எடுத்து அதில் படுதோல்வியைச் சந்தித்தார். இந்த படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி இருந்தார்கள்.

ஆரம்ப கட்டத்தில் தன் கடை விளம்பரங்களில்  இவரே பல பிரபல முன்னணி நடிகைகளோடு இணைந்து நடித்தார். இவர் சினிமாவிற்கு வரக்கூடிய ஒத்திகை தான் இது என்று யாரும் சற்றும் எதிர்பார்க்காத போது திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

மேலும் தி லெஜென்ட் படம் ஓடிடியில் கூட சரியான அளவு விற்பனை ஆகவில்லை என்பதால் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருந்தது.

இந்தப் படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகரான சின்ன கலைவாணர் விவேக் நடித்திருந்தார் மேலும்   அண்ணாச்சியோடு இணைந்து ஊர்வசி ராவ்டேலா, கீத்திகா, பிரபு, விஜயகுமார், யோகி பாபு, விவேக், கோவை சரளா, நாசர் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

பலராலும் பல வகையில் பேசப்பட்ட இந்தப்படம் கடைசியில் தோல்வியை தழுவியது.இந்த தோல்வியிலிருந்து வெளிவருவதற்குள்  மீண்டும் அண்ணாச்சி மற்றொரு படம்  செய்வார் என்று அரசல்புரசலாக செய்திகள் வந்துள்ளது.

 இந்த  இந்த படம் ரொமான்டிக் மற்றும் ஆப்ஷன் இரண்டும் சேர்ந்த கலவையாக இருக்கலாம் இதில் இவர்களும் செய்வார் நன்றாக சண்டையும் போடுவார். மேலும் இந்தப் படத்தை இவரே தயாரித்து வெளியிடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்றும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முழுமையாக வெளிநாட்டில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 இவர் மீண்டும் திரைஉலகம் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார் என்று நினைத்தவர்கள் மீண்டும் இவர் களத்தில் இறங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 இப்போது இந்தப் படத்திற்கான கதையை தேடிக்கொண்டிருக்கும் இவர் இந்த படம்  பற்றிய அப்டேட்களை கட்டாயம் இவர் தீபாவளியன்று வெளியிடுவார் என  இருக்கிறார்கள்.

சரவணன் இரண்டாவதாக தயாரிக்க படக்கூடிய இந்த படத்திற்கான பட்ஜெட் எவ்வளவு? யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்று திரையுலகம் தற்போது அதைப்பற்றி முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

தமிழ் திரை உலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையில் …