நான் ரெடி.. விஜய் ரெடியான்னு கேட்டு சொல்லுங்க.. ரஜினிகாந்த் நேரடி சவால்..!

நடிகர் விஜய்யின் கடைசி படத்துடன் தன்னுடைய படத்தை நேருக்கு நேர் மோத விட தயாராக இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற தகவல்கள் கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருகின்றது.

நடிகர் விஜய் தற்போது தன்னுடைய முழு நேர பொதுப்பணிக்காக நடிப்பை விட்டு விட்டு முழு நேர அரசியல் ஈடுபட தயாராகிக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தின் இயக்கத்தில் நடிக்க வருகிறார்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிரி கிடக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போது ரசிகர்கள் பலரும் கொண்டாடினார்கள். அதேசமயம் ஒரு விதமான சோக ரேகையும் சமூக வலைதளங்களில் பரவி கிடந்தது.

ஏனென்றால் நடிகர் விஜயின் கடைசி படம் இது.. இந்த படத்தின் அறிவிப்பை கொண்டாடுவதா..? அல்லது என்ன செய்வது..? என்று தெரியாத மனநலையில் இருப்பதாக பல விஜய் ரசிகர்கள் தங்களுடைய நிலையை விளக்க முடியாமல் தவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க இந்த படம் 2025 தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கும் என்று கூறுகிறார்கள்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெய் பீம் என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் டி ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ரஜினிகாந்த் அதனை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தையும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார்.

இப்போது கோடம்பாக்கத்தில் மிகப்பெரிய ஹாட் டாபிக்காக இருப்பது தளபதி 69 திரைப்படமும்.. ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமும் 2025 தீபாவளி அன்று வெளியாக இருப்பது தான்.

நடிகர் விஜய் வரலாற்றில் சில முறை நடிகர் ரஜினிகாந்தின் படங்களுடன் தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். ஆனால், சமீபகாலமாக நடிகர் விஜய்க்கும் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் நிழல் உலகில் மறைமுகமான சில போட்டிகள் இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த விஷயம் எப்போது வெளியில் தெரிய ஆரம்பித்தது என்றால் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய திரைப்பட விழாவில் காக்கா கழுகு என ஒரு கதையை கூற அதனை பிரதிபலிக்கும் விதமாக தன்னுடைய ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் காக்கா கழுகு ஆகியவற்றை ஊமையாக கொண்டு ஒரு கதையை கூறினார்.

இதன் மூலம் இருவருக்குள்ளும் இருக்கக்கூடிய அந்த போட்டி ரசிகர்களுக்கு தெரியவந்தது. மறுபக்கம் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குகிறேன் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி கடைசி நேரத்தில் பின் வாங்கி விட்டார்.

ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிய ஒரு சில மாதங்களில் தன்னுடைய கட்சியின் பெயர்.. கட்சிக்கொடி.. முதல் மாநாடு என அடுத்தடுத்து நகர்வுகளை செய்து கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தை தளபதி 69 திரைப்படத்துடன் மோத விடுவதற்கு தயார் நிலையில் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் என்று கூறுகின்றனர் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

அதுவும் இந்த படத்தை வெறும் 2 மாதங்களில் எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது என்றும் இதற்கான முன்னேற்பாடு வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

“செ** எந்த பொசிஷன்” கேள்வி எழுப்பிய ரசிகர்!! – கடுப்பாகி பதிலடி தந்த நீலிமா ராணி..

நீலிமா தேவி தமிழ் திரை உலகில் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் …

Exit mobile version