எங்கள் உறவில் இதுவும் உண்டு.. ஜெயம் ரவி விவாகரத்தில் குண்டை தூக்கி போட்ட கெனிஷா..!

கடந்த மூன்று மாதங்களாகவே சினிமா வட்டாரத்தில் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. ஜெயம் ரவியும் ஆர்த்தியும் 18 வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிய போவதாக அறிவித்து இருந்தார்.

ஜெயம் ரவி இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பிருந்தே அவர்கள் இருவரும் பிரிய போவதாக பேச்சுக்கள் மட்டும் சமூக வலைதளங்களில் இருந்து வந்தன. இந்த நிலையில் ஜெயம் ரவியே அதை ஒப்புக்கொண்ட பிறகு இந்த பிரச்சனை இன்னும் அதிகமாக சூடு பிடிக்க துவங்கியது.

எங்கள் உறவில் இதுவும் உண்டு

இதனை தொடர்ந்து தன்னிடம் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமலேயே ஜெயம் ரவி தனக்கு விவாகரத்து அறிவித்திருக்கிறார் என்று கூறி அவரது மனைவி ஆர்த்தி புது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது இன்னும் அதிக சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இதற்கு நடுவே ஜெயம் ரவி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் அதனால் தான் அவர்கள் விவாகரத்துக்கு முயற்சி செய்து வருகிறார் என்றும் ஒரு பேச்சு இருந்தது. அதற்கு தகுந்தார் போல அடிக்கடி கோவா சென்று வருகிறார் ஜெயம் ரவி என்று கூறப்பட்டது.

ஜெயம் ரவி விவாகரத்து

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கனிஷா என்கிற பாடகியுடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு இருப்பதாக பேச்சுக்கள் அடிபட துவங்கியது. கனிஷா உடன் பல நாட்கள் தங்கி வந்த ஜெயம் ரவி அங்கே அவருடன் காதலில் இருந்து வந்ததாகவும் அதனால்தான் தற்சமயம் தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்த ஜெயம் ரவி கூறும் பொழுது கனிஷா மிகவும் நல்லவர். மிகவும் போராடி வந்து பாடகி ஆனவர். அவரை என்னுடன் சேர்த்து வைத்து தவறாக பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் கனிஷாவும் பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

அதில் அவர் கூரும்பொழுது நட்பிலும் அதீத அன்பு உண்டு. அப்படியான ஒரு அன்பு தான் எனக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே உள்ளது. அதை பலரும் தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்கள் என்று விளக்கம் அளித்து இருந்தார் இந்த நிலையில் கனிஷாவின் இந்த விளக்கமும் கூட இப்பொழுது வைரலாக துவங்கியிருக்கிறது.

About Jiraya

Check Also

என்ன நாட என்ன நாட ஏறி வர ஜில்லுக்கா… திரிஷாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த இளைஞர்!! – ஷாக்கில் ரசிகர்கள்..

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் திரிஷா பற்றி …