வேலைவாய்ப்பு: திருச்சியில் உள்ள திருவானைக்காவல், அருள்மிகு ஜம்போகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சுமார் 7 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் இந்து அறநிலையத்துறை அறிவிப்பை செய்துள்ளது.
மேலும் இந்த வேலையை காண தகுதி உடையவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்ய இருக்கிறார்கள். இந்தப் பணிகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவர்கள் வரும் 11.05. 2023 மாலை வரை நீங்கள் உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
employment
இங்குள்ள காலி பணியிடங்கள் என்னவென்றால் தட்டச்சர் ஒன்று, உதவி மின் பொறியாளர் ஒன்று, காவலர் நான்கு, பெருக்குபவர் ஒன்று
இதற்கான கல்வி தகுதி தட்டச்சரை பொருத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு இணையான கல்வித் தகுதி இருக்க வேண்டும். மேலும் அரசு தொழில்நுட்ப தட்டச்ச தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமானதாகும்.
உதவி மின் பணியாளர் பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றிருப்பதோடு மின் உரிம வாரியத்திடமிருந்து எச் சான்றிதழ் பெற்றிருப்பது அவசியமாகும்.
காவலர் மற்றும் பெருக்குபவர் பணிக்கு தமிழ் படிக்க மற்றும் எழுதத் தெரிந்திருப்பது அவசியமாகும். மேலும் வயது வரம்பை பொருத்தவரை விண்ணப்பதாரர்கள் 01.07.23 நாம் தேதி என்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் 45 வயதுக்கு மேற்படாதவர்களாகவும் இருப்பது அவசியமாகும்.
employment
நீங்கள் விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பத்தோடு உங்கள் பிறந்த தேதியை சரிபார்க்க பள்ளி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை, இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க ஜாதி சான்றிதழ், கல்வி சான்றிதழின் நகல், நன்னடத்தைச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து சுய விலாசம் இட்ட 25 ரூபாய் மதிப்பு உள்ள அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் உரையோடு இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி
உதவி இயக்குனர்/ செயல் அலுவலர்
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்,
திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 620 005.
மேலும் விவரங்களை நீங்கள் அறிந்து கொள்ள கீழ்காணும் இணையத்தில் சென்று அனைத்து விதமான தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/25706/document_1.pdf