“கடுக்காய் தரும் நன்மைகள்..!” – ஒவ்வொன்றாய் பார்க்கலாமா?

சித்தர்கள் கூறிச் சென்ற மூலிகை மருத்துவத்தில் கடுக்காய்க்கு என்று ஒரு தனி இடம் உள்ளது.எனவே இதை மூலிகைகளின் அரசன் என்று கூறலாம். அந்த அளவு இதில் ஒளிந்திருக்கும் நன்மைகள் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கியத்தையும் தருகிறது.

உடலுக்கு கடுக்காய் செய்யும் நன்மைகள்

👍கடுக்காய் ஆனது நம் செரிமான மண்டலத்திற்கு உதவித்தரமாக உள்ளது. இது நமக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை, வயிற்று புண்கள் போன்றவற்றை குணப்படுத்துவதில் அற்புதமான பணியை செய்கிறது. எனவே கடுக்காய் பொடியை சிறிதளவு நீரில் போட்டு குடித்தாலே போதும் உங்கள் செரிமான மண்டலம் மேம்பாடு அடையும்.

👍சளி மற்றும் இருமல் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள், சுவாசப் பிரச்சனைகள் இருப்பவர்கள், நுரையீரல் மற்றும் அதன் காற்றுப்பாதையில் அடைத்திருக்கும் சளியை வெளியே கொண்டு வர நினைப்பவர்கள் கட்டாயம் இந்த கடுக்காயை சுடுநீரில் போட்டு குடித்தாலே போதும். உங்கள் சுவாச மண்டலம் மேம்படுவதோடு சளியும் வெளியேறும். இது மிகச்சிறந்த ஆன்ட்டிபயாட்டிக்காக செயல்படுகிறது.

👍ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒரு மிகச்சிறந்த மருந்தாக  கடுக்காய் உள்ளது. மேலும் சர்க்கரை சத்து அதிக அளவு இருப்பவர்கள் இந்த கடுக்காயை சாப்பிடுவதின் மூலம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

👍ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஆற்றல் இந்த கடுக்காய்க்கு உள்ளது. மேலும் ரத்த அழுத்தத்தை குறைக்க இது உதவி செய்கிறது.

👍மலச்சிக்கலால் பாதிக்கப்பட்ட இருப்பவர்கள் இரவு நேரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு கடுக்காயை நீரில் கலந்து குடிப்பதின் மூலம் இயற்கை மலம் இளக்கியாக செயல்பட்டு உங்கள் மலத்தை எளிதில் வெளியேற்ற உதவி செய்யும். மேலும் இது நார்ச்சத்து அதிகம்  இருப்பதால் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த மருந்து என்று கூறலாம்.

👍முகத்தில் ஏற்படும் முகப்பரு, கரும்புள்ளிகளை எளிதில் நீக்க கடுக்காய் பொடியை டேஸ்டாக மாற்றி அந்தப் பகுதிகளில் நீங்கள் தடவி விட்டால் பருக்கள் கரும்புள்ளி பிரச்சனைகளிலிருந்து தீர்வு கிடைக்கும்.

👍உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்  கடுக்காய் பொடியை ஒரு நாளில் எந்த வேளை வேண்டுமென்றாலும்  எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு உடல் எடை குறையும்.

👍நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சரும பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய அற்புத ஆற்றல் கொண்டதாக இந்த கடுக்காய் விளங்குவதால் நீங்கள் வாரத்தில் ஒருமுறை கடுக்காயை எடுத்துக் கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …