Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

நீச்சல் குளத்தில் ஆண் நண்பர்களுடன் கும்மாளம்.. கண்ணீர் விட்டு கதறும் மாநாடு பட நடிகை கல்யாணி..!

மலையாளம் தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் கேரள நாட்டு நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த பிரியதர்ஷனின் மகள்தான் கல்யாணி பிரியதர்ஷன்.

ஆரம்பத்தில் இவருக்கு சினிமாவின் மீது எல்லாம் அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. மிகவும் உடல் பருமனாக அப்போது இருப்பார் கல்யாணி பிரியதர்ஷன். தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் அவருக்கு சினிமாவின் மீது ஆர்வம் வந்தது.

அதனை தொடர்ந்து அவரது உடல் எடையை வெகுவாக குறைத்த கல்யாணி பிரியதர்ஷன் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர தொடங்கினார். தன்னுடைய தந்தையின் ஆதரவு இல்லாமலேயே சினிமாவிற்குள் நுழைய வேண்டும் என்பது கல்யாணி பிரிய தர்ஷனின் ஆசையாக இருந்தது.

இன்ஸ்டா மூலம் வாய்ப்பு:

தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகளும் அப்படித்தான் கிடைத்தது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராமில் சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்த பொழுது கல்யாணி பிரியதர்ஷனின் புகைப்படத்தை பார்த்து அவரை தன்னுடைய ஹீரோ என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் சிவகார்த்திகேயன்.

---- Advertisement ----

தற்கு முன்பு தெலுங்கில் மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவை கல்யாணி பிரியதர்ஷினிக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. ஆனால் ஹீரோ படம் கொஞ்சமாக இவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

 

அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு அவ்வளவாக நடிக்க வரவில்லை என்பது ஒரு குறையாக இருந்து வந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடிக்க கற்றுக் கொண்ட கல்யாணி ப்ரியதர்ஷன்  சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் மூலம் பலரையும் ஈர்க்கும் ஒரு கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் இருந்தார்.

மலையாளத்தில் பிரபலம்:

மலையாளத்தில் இவர் நடித்த ஹிருதயம் என்கிற திரைப்படம் அவருக்கு வேற அளவில் மலையாளத்தில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தற்சமயம் மலையாளத்தில் உள்ள முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்

இதற்கு நடுவே தமிழில் ஜெயம் ரவி நடித்து வரும் ஜீனி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். பொதுவாக அவ்வளவாக கவர்ச்சி காட்டாதவர்தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

அவரது திரைப்படங்களில் எல்லாம் டீசண்டான ஒரு லுக்கில் தான் அவரை பார்க்க முடியும். இந்த நிலையில் அதிக கவர்ச்சி இல்லாமல் அடக்கமான கவர்ச்சியோடு சில புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் கல்யாணி. அதில் அவருடன் அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்கள் தற்சமயம் அதிக வைரல் ஆகி வருகிறது. மேலும் கண்ணீர் விட்டு அழுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷினி . அந்த புகைப்படத்திற்கு கீழே யாரும் பயப்பட வேண்டாம். அது டப்பிங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் என கூறியுள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷினி.

Continue Reading

More in Actress

Trending

To Top