ஓடி ஓடி உதவி செய்யும் Kpy பாலாவின் கனவு நிறைவேறியது.. இதோ வீடியோ.

ஓடி ஓடி உதவி செய்யும் KPY பாலாவின் கனவு நிறைவேறியது.. இதோ வீடியோ..

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KBY பாலா. அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

மிகச்சிறந்த காமெடி கலைஞர். இடையிடையே பஞ்ச் கவுண்ட் கொடுத்து, மற்றவர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பவர். சமீபமாக சினிமாவிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.

KBY பாலா

கடந்த ஓராண்டாக பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து அதன்மூலம் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருபவர் KBY பாலா.

குறிப்பாக சத்தியமங்கலம், அத்தாணி பகுதியில் மலைகிராமத்தில் வாழும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களை இலவசமாக வாங்கி தந்தார்.

ஓடி ஓடி உதவி செய்யும் Kpy பாலாவின் கனவு நிறைவேறியது.. இதோ வீடியோ..

ஆம்புலன்ஸ் வாகனங்கள்

இதுவரை அப்படி 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை, அவசர காலத்தில் ஏழை மக்களுக்கு உதவ இலவசமாக வாங்கி தந்திருக்கிறார் KBY பாலா.

இதையும் படியுங்கள்: காதலனை கரம் பிடிக்கும் பாவனி ரெட்டி.. இது எத்தனையாவது திருமணம் தெரியுமா..?

இத்துடன் போதிய போக்குவரத்து பஸ் வசதியற்ற சென்னையில் ஏழை மக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் பயணிக்க இலவச ஆட்டோ ஒன்றை வாங்கி விட்டுள்ளார்.

சமீபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அவர் ஓட்டும் விதமாக வடிவமைக்கப்பட்ட டூவீலர் ஒன்றை வாங்கி தந்தார்.

ஓடி ஓடி உதவி செய்யும் Kpy பாலாவின் கனவு நிறைவேறியது.. இதோ வீடியோ..

சென்னையில் கனமழை

அதுமட்டுமின்றி கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னையில் கனமழை ஏற்பட்ட போது, தன் கையில் இருந்த ரூ. 5 லட்சம் வரை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 1000 வீதம், 340 பேருக்கும், மீதம் இருந்த பணத்தில் பெட்ஷீட், லுங்கி, நைட்டீ, பாய், தண்ணீர் பாட்டில், ரொட்டி என மக்களுக்கு வாங்கித் தந்தார்.

இதையும் படியுங்கள்: என்ன சொல்றீங்க.. நடிகை நிவேதா பெத்துராஜ்.. சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா. இருவருக்கும் இப்படி உறவா..?

இப்படி ஏழை மக்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஓடி ஓடி உதவி செய்யும் பாலாவுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பலத்த பாராட்டும் கிடைத்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன், உங்கள் வலைதள பக்கத்தில் என் மகளுக்கு மருத்துவ உதவி செய்யுங்கள் என்று கேட்ட ஒரு பெண்மணியிடம், அவரது வீட்டு விலாசம் விசாரித்து நேரில் சென்று ஒரு லட்சம் ரூபாயை, அவரது மகளின் மருத்துவ செலவுக்கு கொடுத்து வந்தார் KBY பாலா.

ஓடி ஓடி உதவி செய்யும் Kpy பாலாவின் கனவு நிறைவேறியது.. இதோ வீடியோ..

நீண்ட நாள் கனவு

இந்நிலையில், தனது நீண்ட நாள் கனவு ஒன்று நிறைவேறியதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வீடியோ ஒன்றை KBY பாலா வெளியிட்டுள்ளார். அதில் விழா மேடை ஒன்றில், நடிகர் பிரபுதேவாவும், KBY பாலாவும் சேர்ந்து
வெண்ணிலவே வெண்ணிலவே என்ற மின்சார கனவு பாடலுக்கு, இருவரும் நடனமாடியுள்ளனர்.

நடனப்புயல் பிரபுதேவா

இது என்னுடைய நீண்ட நாள் கனவு, நடனப்புயல் பிரபுதேவாவுடன் நடனமாடிய சந்தோஷத்தை அந்த வீடியோவை பதிவிட்டு வெளிப்படுத்தி இருக்கிறார் KBY பாலா. அந்த வீடியோ இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version