பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா திரைப்படத்தில் இடம்பெற்ற தூம் தான் தோஸ்தான் என்ற பாடலுக்கு லுங்கியை மடித்துக் கொண்டு தர லோக்கலாக இறங்கி குத்தாட்டம் போட்டிருக்கும் புகையை வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகை கீர்த்தி சுரேஷின் நடன திறமையை கண்டு வியந்து வருகின்றனர். அந்த அளவுக்கு இறங்கி குத்தாட்டம் போட்டிருக்கிறார் அம்மணி. தன்னுடைய தோழியுடன் சேர்ந்து கொண்டு இவர் போட்டுள்ள இந்த ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். தொடர்ந்து தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த அன்றாடம் இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.
மேலும், படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க தயாராகி வருகிறார். முன்னதாக கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று ஒரு கொள்கை இருக்கிறது… எனக்கென்று ஒரு கோட்பாடு இருக்கிறது.. என்று வானம் வரை வசனம் பேசி வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
பட வாய்ப்புகள் தரை தட்டுவதை உணர்ந்துகொண்டு தற்போது கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டு இருக்கிறார் காரணம் இளம் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயக்கம் காட்டுவது கிடையாது எந்த அளவுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி பட வாய்ப்புகளை பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
எப்போதும் இல்லாத அளவுக்கு சமீப காலமாக சினிமாவை நோக்கி வரும் இளம் நடிகைகளின் படையெடுப்பு சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது. மட்டுமில்லாமல் யூடியூப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயல்களில் தங்களுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை நிரூபித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகும் இளம்பெண்கள் மற்றும் மாடல் அழகிகள் சினிமா வாய்ப்புகளை பெறுவதற்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார்கள்.
இப்படி கடுமையான போட்டி நிறைந்த இந்த சூழ்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷும் கவர்ச்சியாக நடிக்க இறங்கி வந்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்திலும் நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்தே என்ற திரைப்படத்திலும் படு சூடான காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆட்டம் போட்டிருக்கும் இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.