நீங்க அப்படிபட்ட ஆளா? உன் பெற்றோருடன் அப்படி இருக்கீங்களா? கென்னிஷாவின் செருப்படி பதில்.. அதிர்ந்த இணையம்..

கடந்த ஒரு மாதமாகவே இணையதளம் முழுமையாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து விஷயமானது காத்து தீ போல் பரவி வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்த விஷயத்தை பொருத்த வரை ஆர்த்தி தன்னிடம் ரவி கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த அறிக்கையை விட்டிருக்கிறார் என்று கூறி இருந்தார்.

மேலும் தனது 15 ஆண்டு கால திருமண வாழ்க்கையைப் பற்றி பேசிய அவர் இனி தனக்கும் தன் குழந்தைகளுக்கும் எதிர்காலம் என்ன என்ற எமோஷனல் கேள்வியை முன் வைத்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளினார்.

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து..

சமீப காலமாகவே திரை உலகில் நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவதை அடுத்து ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் ஆர்த்தி தன் கணவரை விட்டு பிரிய மனம் இல்லாத காரணத்தால் அவர் அந்த விவாகரத்தை ஏற்றுக் கொள்ளாததோடு ரவி பற்றிய சில திடுக்கிடும் உண்மைகளை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார்.

அந்த வகையில் இவர் கோவாவில் பிரபல பாடகி டென்னிஷாவுடன் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் ஆடி காரில் இவர்கள் இருவரும் சுற்றி திரிந்ததற்கான சில ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜெயம் ரவியின் பதிலடி..

தற்போது ஜெயம் ரவி பிரதர் திரைப்படத்திற்கான டப்பிங் பணியை செய்வதற்காக ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை வந்து அந்த பணியை மேற்கொண்ட இவர் அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்தவர் ஆர்த்திக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.

அதில் அவர் பேசும் போது வாழு வாழ விடு என்பதை மையமாகக் கொண்டு ஆர்த்தி கூறிய குற்றச்சாட்டை மறுத்ததோடு சுமார் 700 க்கும் மேற்பட்ட ஸ்டேஜ் சோக்களில் பாடி இருக்கும் பாடகி கென்னிஷா சுயமாக இந்த அளவிற்கு முன்னேறியவர்.

அது மட்டுமல்லாமல் அவர் ஒரு மிகச்சிறந்த சர்டிபிகேட் பெற்ற சைக்காலஜிஸ்ட் என்ற கருத்தை சொன்னதோடு அவரையும் தன்னையும் இணைத்து பேசுவது தவறு என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.

மேலும் எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஹீலிங் சென்டர்களை ஆரம்பித்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தான் பழகி வருவதாக கூறியதை அடுத்து ஆர்த்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் இதை பேசினார் என்ற செய்திகள் வந்தது.

கென்னிஷாவின் செருப்படி பதில்..

இந்நிலையில் ஜெயம் ரவி மற்றும் கென்னிஷா பற்றி பல்வேறு விஷயங்கள் வெளிவந்த நிலையில் அவற்றுக்கெல்லாம் எந்த பதிலும் சொல்லாமல் இருந்த கென்னிஷா தற்போது ரசிகர்களின் கேள்விக்கு தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்புக்கு ஆளானார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களில் சிலர் ஜெயம் ரவியும் நீங்களும் அங்கு நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறீர்களா? என்று நக்கலாகவும் குதர்க்கமாகவும் கேள்வி எழுப்பி இருப்பதை பார்த்து காண்டாகி போய் அவருக்கு செருப்படி பதிலை தந்திருக்கிறார்.

மேலும் இந்த கேள்வியை கேட்டிருக்கும் நபரை பார்த்து இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்க உங்களுக்கு எப்படி மனது வந்தது. முதலில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? அத்தோடு உங்கள் பெற்றோர்களுடன் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்ற கேள்வியை கேட்டிருக்கிறார். இந்த கேள்வியைப் பார்த்து இது ஆர்த்திக்கு விடுக்கப்பட்டிருக்கும் கேள்வியாக இருக்கலாம் என்று சிலர் பேசி வருகிறார்கள்.

மேலும் ஒரு படி மேலே சென்று நீங்க பாதுகாப்பான ஆளா? என்ற கேள்வியை வைத்ததை அடுத்து இணையமே அதிர்ந்து விட்டது என்று சொல்லலாம். கென்னிஷா பூடகமாக இது போன்ற கேள்விகளை எழுப்பி இருப்பது ஆர்த்தியை மையமாக வைத்து தான் என்று பலரும் தற்போது பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு பட்டிமன்றம் போட்டு பேசக்கூடிய அளவிற்கு விவாதங்கள் ரசிகர்களின் மத்தியில் சென்று உள்ளது.

About Brindha

Check Also

மொரட்டு கட்ட.. நேச்சுரல் அழகி.. கவர்ச்சி உடையில் இளசுகளை ஏங்க வைத்த இளம் நடிகை..!

கடந்த 2001 ஆம் ஆண்டு பிறந்த நடிகை Annie தன்னுடைய நான்கு வயது முதலே திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த …