ஹாஸ்பிடலில் அட்மிட்…கோசிக்ஸ் bone ல் சர்ஜரி – குஷ்பூ ட்வீட்!

1980ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை குஷ்பூ. இவர் பம்பாய் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.தற்போது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு மேல் தமிழ் திரைப்படங்கள் தான்.

ஒரு வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் திரைப்படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார்.1989இல் வருஷம் 16 என்ற திரைப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் உடன் நாயகியாக அறிமுகமானார்.

தமிழ் தவிர்த்து கன்னடம் மலையாளம் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் தமிழில் அனைத்து பிரபல முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு ஆகிய நடிகர்களுடன் நடித்துள்ளார்.

திருச்சியில் இவருக்கு ரசிகர் ஒருவர் கோவில் கட்டி உள்ளார். அந்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை.

இவர் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன், வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், தாலாட்டு பாடவா, நடிகன், மைடியர் மார்த்தாண்டன், பாட்டுக்கு நான் அடிமை, நாட்டாமை போன்ற திரைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட திரைப்படங்கள் ஆகும்.

இதற்கு தான் நாயகியாக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்திலும், குணச்சித்திரன் நடிப்பிலும் அசத்தியிருப்பார்.

நடிப்போடு அரசியலிலும் அதிக ஈர்ப்பு கொண்டவர். 2010ல் திமுகவிலும் அதன் பின்னர் 2014 இல் காங்கிரஸ் கட்சியிலும் தற்போது 2020இல் பாரதிய ஜனதா கட்சியிலும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

திரைப்படங்களில் மட்டுமல்லாது நம்ம வீட்டு மகாலட்சுமி, நந்தினி, மீரா போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.இவரது கணவரும் இயக்குனருமான சுந்தர் சி அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் படங்களை இவரை தயாரித்தும் வருகிறார்.

மேலும் மீரா என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததொடல்லாமல் அத்தொடருக்கான கதை வசனத்தையும் இவரை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகையாக தொகுப்பாளினியாக தயாரிப்பாளராக கதாசிரியராக பன்முகத்தன்மை கொண்டவர் நடிகை குஷ்பூ.

இவர் தற்போது உடல்நல குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும் தனது twitter பக்கத்தில் அவரை ட்விட் செய்துள்ளார்.குஷ்புவின் ட்விட்டை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …