வைரஸ் காய்ச்சல் பாதிப்பால், ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன குஷ்பூ – வைரலாகும் போட்டோஸ்..!

நடிகை குஷ்பூ, தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில், ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். சின்னதம்பி படம்தான், இவரது சினிமா வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு, அடுத்த பத்து ஆண்டுகள், குஷ்புவின் ராஜ்ஜியமாக, அவரது நடிப்பில் அதிக எண்ணி்க்கையில் படங்கள் வெளிவந்தன.ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு, அர்ஜூன், கார்த்திக், ஜெயராம், முரளி, ரகுமான் என முன்னணி நடிகர்களுடன் அதிக படங்களில் குஷ்பு நடித்தார். அதில் பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மட்டுமினறி தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி என பிறமொழி படங்களிலும் குஷ்புவுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தது. இதில் கதாநாயகி கேரக்டர் என்றாலும், அத்துடன் அதில் கிளாமர் காட்சிகளும் அதிகளவில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்த போதும் குஷ்பு லிவிங்ஸ்டன், நாசர் போன்றவர்களுக்கும் ஜோடியாக சில படங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் இவருக்கும், நடிகர் பிரபுவுக்கும் திருமணம் நடந்ததாக தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இருவரும் காதலித்தது உண்மைதான் என, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் குஷ்பு நேரடியாகவே சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முறைமாமன் படத்தில் நடித்த போது, படத்தின் இயக்குநர் சுந்தர் சி, குஷ்புவுக்கு இடையில் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகும், தொடர்ந்து குஷ்பு படங்களில் நடித்தார். தவிர, டிவி சேனல்களில் சில சீரியல்களிலும் குஷ்பு நடித்தார். ஜெயா டிவியில் குஷ்பு நடத்திய ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சி, பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், குஷ்பு அணிந்து வரும் டிசைன் பிளவுஸ்களுக்கு என தனியாக, பெண்கள் ரசிகர் கூட்டமே இருந்தது.

குஷ்பு, தனியாக தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி அதில் சுந்தர் சில இயக்கும் படங்கள், மற்ற இயக்குநர்கள் இயக்கும் படங்கள் மற்றும் சீரியல்கள் தயாரிப்பு நிறுவனமாக, அதை செயல்படுத்தி வருகிறார்.இந்நிலையில், குஷ்பு திடீரென திமுகவில் இணைந்து, கட்சியின் முக்கிய பிரமுசுராக வலம் வந்தார். ஒரு கட்டத்தில், கனிமொழியை காட்டிலும் குஷ்புவுக்கு கட்சியில் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டதால், அதில் அவர் ஓரம் கட்டப்பட்டார். அதன்பிறகு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, கட்சியில் தீவிர பணி செய்தார். ஆனால், அங்கும் குஷ்புவுக்கு உரிய அங்கீகாரம் தரப்படாததால், இப்போது குஷ்பு பாஜகவில் இருக்கிறார். அவருக்கு கட்சியில், முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், குண்டாக இருந்த குஷ்பு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திடீரென ஒல்லியாக மாறினார். உடல் தோற்றமும், முக வடிவமும் முற்றிய மாறிய நிலையில், காட்சி தந்தார். இந்த படங்கள், வைரலானது.உடல் எடைகுறைப்புக்கு பிறகு, குஷ்பு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அடிக்கடி நடக்கிறது. இப்போது, வைரஸ் காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்ட குஷ்பு,. மருததுவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்கள், சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றன.

குஷ்பு விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என, ரசிகர்கள் பலரும் ப்ரே செய்து, அந்த கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …