தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் குணசத்திர நடிகையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
தன்னுடைய 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவர் அந்த திருமணத்திற்கு பிறகு பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் நடிகை சினேகாவின் அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவள் என்ற சீரியலில் நடித்திருந்த இவர் அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் 1500 எபிசோடுகளை தொகுத்து வழங்கி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக உருவெடுத்தார்.
மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்திருக்கும் இவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பேசும் வசனங்கள் பல சினிமாவிலும் இடம்பெறும் அளவுக்கு இருந்தன சினிமாவில் அறிமுகமான பகுதியில் குடும்ப பாங்கினியாக புடவை சகிதமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்த இவர் சமீப காலமாக இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மாடர்ன் ஆன உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்பொழுது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. புடவை சகிதமாகவே லட்சுமி ராமகிருஷ்ணனை பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் மாடர்ன் உடையில் பார்த்ததும் லட்சுமி ராமகிருஷ்ணா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.
தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் சமூகம் சார்ந்த விஷயங்களிலும் துணிச்சலாக குரல் கொடுத்து வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவ்வப்போது சக நடிகைகளுக்கும் இவருக்கும் இணையதள பக்கங்களில் குடுமிபிடி சண்டை நடப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தன்னுடைய கணவருடன் நீச்சல் உடைகள் இருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.