குடும்ப குத்துவிளக்கு லுக்கில்..! – நடிகை சுஹாசினியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நடிகை சுஹாசினிக்கு நிறைய அடையாளங்கள் உண்டு. இயக்குநர் மணிரத்னத்தின் மனைவி. நடிகர் சாருஹாசனின் மகள், நடிகர் கமல்ஹாசன் இவரது சித்தப்பா. நடிகை அனுஹாசன் இவரது தங்கை. திரைப்பட தயாரிப்பாளர். திரைப்பட இயக்குநர். தற்போது, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு நந்தன் என்ற மகன் உள்ளார்.

சிந்து பைரவி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை போன்றவை, சுஹாசினியின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படங்களாக அமைந்தன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

சுஹாசினி மணிரத்னம், இந்திரா படத்தை அவரே இயக்கினார். இதில் அரவிந்த் சாமியும், அனுவும் நடித்திருந்தனர். நெஞ்சத்தை கிள்ளாதே, ஆகாய கங்கை, உருவங்கள் மாறலாம், தாய் வீடு, மனதில் உறுதி வேண்டும், தர்மத்தின் தலைவன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், வசீகரா, சத்தம் போடாதே, அசல், ராவணா, தில்லாலங்கடி உள்ளிட்ட படங்கள், வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சுஹாசினி கடந்த 1986ல், சிந்து பைரவி படத்துக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..

தமிழ் சினிமாவில், கவர்ச்சி காட்டாமல் நடிப்பையும், திறமையும் மட்டுமே நம்பி களத்தில் நின்ற நடிகைகள் ஒரு சிலரே. அதில் மிக முக்கியமானவர் சுஹாசினி. இவர் தான் நடித்த படங்களில் எந்த இடத்திலும், கவர்ச்சியாகவோ, இரட்டை அர்த்த வசன காட்சியிலோ நடித்ததே இல்லை. இவர் நடிக்கும் படங்களை இயக்கும் இயக்குநர்களும் அதுபோன்ற காட்சிகளை அந்த படங்களில் வைப்பதில்லை. ஏனெனில், மிக சிறப்பான நேர்த்தியான நடிப்பை வழங்கும் நடிகை சுஹாசினி. இவரது படங்களில், இவரது நடிப்புக்கு சிறந்த முக்கியத்துவம் இருக்கும்.

அப்படிப்பட்ட படங்களாக தான், இவரது பல படங்கள் அமைந்தன, உதாரணமாக குடும்பம் ஒரு கதம்பம் படத்தில், எஸ்வி சேகர் ஜோடியாக நடித்த சுஹாசினி, ஒரு ஏழை கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட சோகத்தை, அந்த படத்தில் மிக தத்ரூபமாக நடித்து வெளிப்படுத்தி இருப்பார். மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி, என் பொம்முக்குட்டி அம்மாவுககு போன்ற படங்களில், சுஹாசினி நடிப்பில், தனித்துவம் நிறைந்திருக்கும்.சுஹாசினி, இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். பெண்கள் பிரச்னை சார்ந்த விவகாரங்கள் விஸ்வரூபம் எடுக்கும்போது, இவரது கண்டனக்குரல், தமிழ் சினிமா நடிகையரில் ஒருவராக கண்டிப்பாக எதிரொலிக்கும்.

சுஹாசினி, ராதிகா, ரேவதி, குஷ்பு, ரேகா, ஊர்வசி, அம்பிகா, ராதா, நதியா, ஜெயஸ்ரீ, நளினி, சீதா போன்றவர்கள், 1980–90களில், மிக பிரபலமான முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள். அதனால், சில மாதங்களுக்கு ஒருமுறையாவது, ஏதேனும் ஒரு நட்சத்திர ஓட்டலில் இவர்களது ஒட்டுமொத்த சந்திப்பு நிகழும். இதில், நடிகைகள் மட்டுமின்றி அந்த காலகட்டத்தில் இவர்களுடன் ஜோடியாக நடித்த சுரேஷ், மோகன், சரத்குமார், பிரபு, சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் இவர்களது பார்ட்டியில் கலந்துகொள்வர்.

அப்போது, அவர்கள் நடித்த படங்களை பற்றி பேசுவது, நடந்த ஷூட்டிங் சம்பவங்களை நினைவு கூறுவது, புதிய பாடல்களுக்கு ஜோடியாக நடனமாடுவது, ஒருவரை ஒருவர் கிண்டல் கேலி செய்து கொள்வது என, அந்த நாள் அவர்களுக்கு பழைய பள்ளி மாணவ, மாணவியர் சந்திப்பு போன்ற இனிமையான நிகழ்வாக அமையும்.நடிகை சுஹாசினி சமீபத்தில், சில புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அவற்றை பார்த்தால், இவர் 60 வயதை கடந்து விட்டாரா, என ஆச்சரியப்படும் வகையில், நடுத்தர வயது பெண் போல, குடும்பப் பாங்கான தோற்றத்தில், மிக அழகாக காட்சி தருகிறார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version