தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கலைஞன் இனி சிவாஜி பிறக்கப் போவதில்லை….அவர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவைப் பற்றி பேசும் போது நடிகர் திலகம் பற்றி பேசாமல் யாராலும் இருக்க முடியாது. தமிழ் சினிமா நட்சத்திரங்களில் முதன்மையாக ஜொலிப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார்.

முதன் முதலில் பராசக்தி என்னும் திரைப்படத்தில் அறிமுகமான போது கதாநாயகருக்கான அந்தஸ்து இல்லை என்று இவரை நடிக்க வைக்க மறுத்தார்களாம்.

நடிப்பதற்கு தகுதியில்லை என்று கூறிய நடிகர் தற்போது நடிப்பிற்கே பல்கலைக்கழகமாக உள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்றுதான். அந்த அளவிற்கு நடிப்பை தனது வாழ்க்கையாகவே மாற்றி திரைத்துறையில் சாதித்தவர் நடிகர் திலகம் அவர்கள்.

திரையில் இவர் தோன்றாத கதாபாத்திரமே இல்லை என்னும் அளவிற்கு அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடத்தி இருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் ஒவ்வொரு மாதிரியான உடை நடை பாவனை என்று அனைத்திலும் வித்தியாசம் காட்டு இருப்பார்.

நாம் கர்ணன் வீரபாண்டிய கட்டபொம்மன் வ உ சிதம்பரனார் போன்ற சரித்திர நாயகர்கள் நாம் நேரில் பார்த்ததில்லை. ஆனால் திரையில் இவர் வடிவில் இவர்களை இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்னும் அளவிற்கு தத்ரூபமாக நடித்திருந்தார்.

சரித்திர கதைகளாக இருந்தாலும் சரி சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய கதையாக இருந்தாலும் சரி சாதாரண எளிமையான கதைகளாக இருந்தாலும் சரி அதனுடைய தேர்ந்த நடிப்பால் அனைத்து கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தவர்.

தற்போது ஒரு கதாபாத்திரத்தை ஏற்றி நடிப்பதற்கு சிரமப்படும் நடிகர்களிடையே அந்த காலங்களில் மூன்று வித்தியாசமான கேரக்டர்களை ஒரே நேரத்தில் நடித்து அசத்திய சிறந்த நடிகர்.

பச்சை விளக்கு என்னும் திரைப்படத்தில் கஷ்டப்படும் ஏழ்மை குடும்பப் பின்னணியில் இருக்கும் சாதாரண மனிதனாகவும், அதே சமயத்தில் கர்ணன் என்னும் சரித்திர திரைப்படத்தில் கொடை வள்ளல் கர்ணனை பிரதிபலித்து நடித்திருந்தார். மேலும் ஆண்டவன் கட்டளை என்னும் திரைப்படத்தில் வாழ்க்கை துறந்து துறவியாக தனது வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளும் ஒரு துறவியாக நடித்திருந்தார்.

மூன்று படங்களும் வெவ்வேறு கதைக்கலாம் அதை திறம்பட கையாண்டு வெற்றிகரமாக நடிக்க முடிந்தது என்றால் அது நடிகர் திலகத்தை தவிர வேறு யாராலும் சாத்தியம் இல்லை என்பதை உண்மை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …