குழந்தைகளை ஈஸியா ஹேண்டில் பண்ண : கோடை விடுமுறை வந்தாலும் வந்தது பிள்ளைகளின் தொல்லை வீட்டில் பல மடங்காக அதிகரித்து விட்டதோடு எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பெற்றோர்கள் திண்டாடி வருகிறார்கள்.
இப்படி அட்டகாசமாக சேட்டைகள் செய்து வரும் குழந்தைகளை பராமரிக்க கூடிய எளிய சூப்பர் டிப்ஸ்சை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்கள் குழந்தைகள் நீங்கள் பார்த்ததுமே உங்கள் சொல்லுக்கு கட்டுப்படும் பிள்ளைகளாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
Parenting Tips
என்ன செய்கிறீர்கள் என்று தெரியாமல் தவித்து வரும் குழந்தைகளை நீங்கள் எளிதாக கையாள அவர்களுக்கு விருப்பம் உள்ள தனி திறன்களை மேம்படுத்தக்கூடிய வகுப்புக்களுக்கு அழைத்துச் செல்லலாம்.
மேலும் வீட்டிலேயே அவர்கள் விளையாட தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களோடு இந்த கோடையில் நீங்களும் இணைந்து சில மணி நேரங்கள் அவர்களோடு செலவிட்டு விளையாடுவதின் மூலம் உங்களுடைய உறவு மேலும் மேம்படும்.
Parenting Tips
குழந்தைகளிடம் குடும்ப நிலைமையை அமர வைத்து எடுத்துப் பேசும்போது அவர்கள் உணரக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அது மட்டுமல்லாமல் ஒரு சிறிய அளவிலான தொகையை கொடுத்து அதில் தான் செலவு செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுப்பதன் மூலம் பணத்தை எப்படி செலவு செய்யலாம் என்பதை அவர்களே திட்டமிட முடியும்.
நட்பு முறையில் உங்கள் பிள்ளைகளை அணுகுவதின் மூலம் எல்லாவற்றையும் உங்களிடம் வெளிப்படையாக கூறக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதன் மூலம் பிள்ளைகளுக்கு இடையே ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை விரைவில் நீங்கள் எளிதாக குறைத்து விட முடியும்.
Parenting Tips
ஒரு நாள் இரண்டு நாள் என்று அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதின் மூலம் மன மகிழ்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அங்கு இருக்கக்கூடிய மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அனுபவபூர்வமாக புரிந்து கொள்வார்கள்.
மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் பயன்படுத்துவது மூலம் உங்கள் குழந்தைகளை பக்குவமாக நீங்கள் கையாளுவது எளிதாக மாறிவிடும்.