நடிகர் விஜய் சேதுபதி தொகுதி வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக தன்னுடைய இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து சில விமர்சனங்களை இந்த நிகழ்ச்சி பெற்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த போட்டியின் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்துவிடும். இந்நிலையில், அதற்கு முன்னதாக பிக் பாஸ் வீட்டிற்குள் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறப் போவது யார்..? என்பதை காண ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்த முறை பயங்கரமான டிவிஸ்ட்டாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் 15 நொடிக்குள் வரும் நபர் பணப்பெட்டியுடன் போட்டியை தொடரலாம். 15 நொடிகளுக்கு மேல் ஆகிவிட்டால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
டைட்டில் வின்னர் ஆவதற்கு வாய்ப்பு இருக்கக்கூடிய போட்டியாளராக கருதப்படும் முத்துக்குமரன் பணப்பெட்டியை எடுக்க முயற்சித்த போது ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என பலரும் நினைத்தனர்.
ஆனால், வெற்றி கரமாக பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து விட்டார் முத்துக்குமரன். இவருடைய இந்த துணிச்சலை பாராட்டி இருக்கிறார் சக பிக்பாஸ் போட்டியாளர் ஆர் ஜே ஆனந்தி.
பிக் பாஸ் எட்டாவது சீசனின் டைட்டிலை முத்துக்குமரன் தான் வெல்வார் என அவரது ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் வெறும் 50,000 பணத்திற்காக முத்துக்குமரன் எடுத்த இந்த ரிஸ்கை பார்த்து பலரும் ஷாக் ஆகிவிட்டனர்.
30 மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு 15 நொடிகளுக்குள் வீட்டுக்குள் வந்தால் பணப்பெட்டியும் கிடைக்கும் போட்டியிலும் தொடரலாம்.. 15 நொடிக்குள் வரவில்லை என்றால் பணப்பெட்டி கிடைக்கும் ஆனால் போட்டியில் தொடர முடியாது என்ற சூழ்நிலையில் முத்துக்குமரன் எடுத்திருக்கக் கூடிய இந்த ரிஸ்க் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.