வாழ்க்கை முறை."உங்க செடிகளுக்கு தெளிக்க கூடிய இயற்கை பூச்சி கொல்லி..!" - நீங்களே தயாரிக்கும் முறைகள்..!

.”உங்க செடிகளுக்கு தெளிக்க கூடிய இயற்கை பூச்சி கொல்லி..!” – நீங்களே தயாரிக்கும் முறைகள்..!

 இயற்கை பூச்சி கொல்லி: இன்று மாறி வரும் மாசு நிறைந்த சுற்றுச்சூழல் மற்றும் காய்கறி, பயிர் உற்பத்திக்காக அதிகளவு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து  கொண்ட மக்கள் தற்போது அவரவர் வீடுகளில் மாடித்தோட்டம்,  காலியாக இடம்  வைத்து இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை எவ்வித ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் விளைவிக்கக்கூடிய வகையில்  விழிப்புணர்வுடன் நகரத்தில் உள்ள மக்கள்  தங்கள் வீடுகளில் காய்கறித் தோட்டங்களை அமைத்து வருவது அதிகரித்த வண்ணமாக உள்ளது.

pesticide

வீட்டு தோட்டம் மற்றும் மாடி தோட்டத்தில் எண்ணற்ற வகையான காய்கறிகளை பயிரிட்டு வருகிறார்கள். அதில் குறிப்பாக வெண்டைக்காய்,கத்திரிக்காய், தக்காளி, முருங்கை மற்றும் கொடி வகைகளாக பீர்க்கங்காய், அவரை,பீன்ஸ், பூசணிக்காய், சுரைக்காய் போன்றவற்றை கூறலாம் இதோடு  கொத்தமல்லி ,கீரை வகைகள்  போன்றவற்றையும்  வளர்த்தி வருவார்கள்.

செடிகளுக்கு போதியளவு சத்துமானம் மண்ணில் இருக்கும் பொழுதுதான் அவை செழித்து வளரும். அவை குறையும் போது தான் எண்ணற்ற நோய்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கவும், பூச்சிகளின் தாக்குதலை இயற்கையான முறைகளில் சரி செய்ய கூடிய எளிமையான வழிகளை  காணலாம்.

வேப்பிலை கரைசல்:

வேப்பிலை ஒரு இயற்கையாக அமைந்த ஒரு பூச்சிக் கொல்லியாகும். கால் கிலோ வேப்பிலையை நன்றாக அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளில்  தெளித்து வர அனைத்து வித பூச்சிகளும் உங்கள் செடிகளை நெருங்காது. பூச்சிகள் செடிகளின் இருக்கும் பட்சத்தில் அதன் இனவிருத்தி  குறைந்துவிடும். எனவே மாதத்தில் இரண்டு முறை இதை செய்து பாருங்கள்.

பூண்டு, மஞ்சள் மற்றும் வெங்காய கரைசல்:

pesticide

100 கிராம் பூண்டு மற்றும் 100 கிராம் வெங்காயம் இவற்றை நன்றாக வெட்டி  மிக்ஸியில் மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு இதனுடன் 25 கிராம் மஞ்சள் பொடியை சேர்த்துக் கொள்ளவும் இதை நன்றாக கலக்கி ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள்.

மறுநாள் காலை எழுந்ததும் இவற்றை உங்கள் செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் எத்தகைய பூச்சிகளையும் விரட்டியடிக்க கூடிய தன்மை இந்த இயற்கை பூச்சி கொல்லிக்கு உண்டு. மாதத்தில் ஒரு முறை இதைச் செய்தாலே போதும் எந்தவித பூச்சிகளின் தாக்குதலுக்கும்  செடிகள் ஆளாகாது.

மிளகு மற்றும் உப்பு கரைசல்:

pesticide

100 கிராம் உப்பினை நன்றாக ஒன்றரை லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும் பின்பு 25 கிராம் பொடியாக்கிய மிளகினை இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் வாரம் ஒரு முறை  உங்கள் தோட்டத்தில் இருக்கும் செடிகளின் மீது தெளித்து வர வேண்டும் அவ்வாறு தெளிப்பதன் மூலம் எவ்வித பூச்சிகளின் தாக்குதலுக்கு உட்படாமல் இருக்கும் மேலும் அதில் பூச்சிகள் இருந்தால் அவற்றை அது கொன்றுவிடும்.

இதனை நீங்கள் தெளிக்கும்போது அப்பூச்சிக்கொல்லி கரைசலானது உங்கள் செடிகளின் வேர்களில் விழந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்படி விழுந்தால் முற்றிலும் உங்கள் செடி முற்றிலும் அழிந்து போக வாய்ப்புள்ளது. எனவே இதனை செய்யும் போது மிகவும் கவனமாக செய்யுங்கள்.

மேற்கூறிய மூன்று வகையான இயற்கை பூச்சிக்கொல்லிகளை உங்கள் வீட்டுத் தோட்டங்களில் பயன்படுத்தி பூச்சிகளில் இருந்து உங்கள் தோட்டத்தை காத்து  அதிக மகசூலையும்  பெறுங்கள்.

Trending News

அம்பலமான அல்ப்பத்தனம்.. விசாரணை முடிவில் நீதிமன்றம் அதிரடி.. சிக்கலில் நயன்தாரா..!

0
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இடையே நிலவும் பிரச்சனை அனைவரும் அறிந்ததே. நயன்தாராவின் திருமண ஆல்பம் வீடியோவில், தனுஷ் தயாரித்த "நானும் ரௌடி தான்" படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு தனுஷிடம் அனுமதி கேட்டும்...

ச்சைக்.. கன்றாவி.. தனுஷிடம் NOC பெற நயன்தாரா பார்த்த மட்டமான வேலை..! காது கூசுதுடா சாமி..!

0
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இடையே நிலவும் பிரச்சனை பலருக்கும் தெரியும். ஆனால், அந்த பிரச்சனைக்கான பின்னணி மற்றும் அதன் ஆழம் பலருக்கும் தெரியாது. "நானும் ரௌடி தான்" திரைப்படத்தின் தயாரிப்பு,...

ரம்பா எல்லாம் கிட்ட கூட வர முடியாது..? இது தொடையா..? இல்ல, வெண்ணெய் கடையா..? திணறடிக்கும் நடிகை..!

0
நடிகை நியா கிருஷ்ணா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். குட்டியான உடை அணிந்து, தனது தொடையழகு எடுப்பாகத் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின்...

ஆத்தாடி.. ஜான்வி கபூர் கட்டியுள்ள புடவையின் விலை தெரியுமா..? வாயை பிளந்த ரசிகர்கள்..!

0
என்னடா உலகம் இது..? என புலம்பி வருகிறார்கள் ஜான்வி கபூர் கட்டியுள்ள இந்த புடவையின் விலை தெரிந்த ரசிகர்கள். ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக...

Red Hot : இடுப்பு வரை கிழிந்த பாவாடை.. ஒரு காலை தூக்கி.. உச்ச கட்ட கவர்ச்சியில் “பாட்டல்...

0
சஞ்சனா நடராஜன், தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். "நெருங்கி வா முத்தமிடாதே" படத்தின் மூலம் அறிமுகமாகி, "ஜகமே தந்திரம்", "சார்பட்டா பரம்பரை" போன்ற படங்களில் தனது நடிப்புத்...