சே நோ டு ஃப்ரீ ஹேர்.. உறவைக் குறிக்கும் பின்னல்.. புதைந்திருக்கும் உண்மைகள்..

இன்று உள்ள இளம் தலைமுறைகள் தலை முடியை பின்னி போடுவதை அநாகரிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பின்னல் ஆனது உறவை குறிக்க கூடிய வகையில் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.

ஆனால் அது முற்றிலும் உண்மை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய காலத்தில் அனைவரும் ஃப்ரீ ஹேர் விடுவது சிறப்பு என நினைத்துக் கொண்டு முடியை விரித்து போடுவது அமங்கலமானது.

சே நோ டு ஃப்ரீ ஹேர்..

பொதுவாகவே தலைமுடியை பின்னி போடுவது தான் மிகவும் சிறப்பானதாகவும் குடும்பத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும். மேலும் தலை முடியை விரித்து போடுவது இறந்தவர் வீட்டிலும் அந்த பிணத்தின் பின்னும் தலைவிரி கோலமாக தான் செல்வார்கள்.

அப்படி தலையை விரித்து போடுவதற்கு காரணம் என்ன அவர் சென்ற பின்னர் எனக்கு என்ன உறவு இனி எந்த உறவும் எனக்கு இல்லை என்பதை குறிக்கத்தான் இப்படி தலைமுறையை விரித்து போட்டு இருந்தார்கள்.

அது மட்டுமல்லாமல் தலைமுடியின் நுனி வழியாக ஆத்ம சக்தி வெளியேறுகிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதனால் தான் இந்த தலை முடியை ஒரு ஊடகமாக பயன்படுத்தி நன்மை தீமை போன்றவற்றை செய்ய பயன்படுத்தி இருக்கிறார்கள்.

எனவே நமது முடியின் நுனியில் நல்ல மற்றும் தீய உணர்வுகளின் அதிர்வுகள் வந்து செல்வதற்காக சாத்தியக்கூறு அதிகளவு இருப்பதால் இது ஒரு ஊடகம் போல செயல்படுகிறது.

உறவைக் குறிக்கும் பின்னல்..

இதனால் தான் சன்னியாசிகள் தங்கள் உறவுகளை விட்டு வெளியே வந்த பின் தலைமுடியை நீக்க மொட்டை அடித்துக் கொள்கிறார்கள்.

அத்தோடு வெளியே இருந்து பெறுவதற்கு அவர்களுக்கு ஒன்றும் இல்லை என்பது போல் தன்னிடம் இருந்து போவதற்கும் எதுவும் இல்லை என்பதை உணர்த்தத்தான் இப்படி மொட்டை அடித்து கொள்கிறார்கள்.

மேலும் ஆரம்ப நாட்களில் முடியின் நுனி வெளியே தெரியாமல் இருக்க நார் அல்லது குஞ்சம் வைத்து கட்டிக் கொள்வது தீய சக்திகளின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகாமல் இருப்பதற்கே.

எனவே இனிமேல் இதை உணர்ந்தாவது நீங்கள் தலைவிரி கோலத்தை தவிர்த்து ஃப்ரீ ஹேர் விடுவதை விடுத்து பின்னி போடுங்கள் தலைமுடியை.

இந்தப் பின்னலில் இருக்கும் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகள் மட்டுமே நமக்கு புலப்படும். இதில் வலது பின்னலானது பிறந்த வீட்டையும் இடது பின்னலானது புகுந்த வீட்டையும் நடுப்பகுதி பெண் தன்னை மறைத்து இரு வீட்டையும் அழகுற பார்க்கின்ற தன்மையை வெளிப்படுத்தக்கூடிய பொருளாக அமைந்துள்ளது.

எனவே இதை உணர்ந்து கொண்டு இனிமேலாவது ஃப்ரீ ஹேர் விடக்கூடிய பழக்கத்தை விடுத்து தலை முடியை பின்னிப் போடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடையலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

புதைந்திருக்கும் உண்மைகள்..

இதை அடுத்து பின்னலுக்குள் எவ்வளவு உண்மைகள் புதைந்து இருக்கிறதா என்று ரசிகர்கள் ஆச்சரியத்தோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam