“அழுக்குப் பிடித்த பழைய தங்க நகை டால் அடிக்கணுமா..!” – இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்க..!

கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பெண்கள் கழுத்தில் நகை இல்லாமல் இருப்பது இல்லை. தினம் தோறும் அணியக்கூடிய இந்த தங்க நகை சில சமயங்களில் அழுக்கு மற்றும் பயன்படுத்துவர்களின் சருமத்தின் தன்மைக்கு ஏற்றபடி நிறம் மாறி மங்கி காட்சியளிக்கும்.

#image_title

மேலும் பார்ப்பதற்கு தங்கமா என்ற கேள்விக்குரியை ஏற்படுத்தக்கூடிய அளவு அதன் ஜொலிப்பு தன்மையை இழந்திருக்கும். இது தங்கமல்ல கவரிங் என்று மனதுக்குள் பலரும் நினைத்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும் தங்க நகையை நீங்கள் நொடியில் ஜொலிக்க வைத்து புதிய நகைப் போல மாற்றுவதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அந்த வழிமுறைகளை இந்த கட்டுரையில் நீங்கள் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

பழைய தங்க நகையை புதிய தங்கமாக மாற்றக்கூடிய வழிமுறை

வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே நீங்கள் இந்த பழைய தங்க நகைக்கு பாலிஷ் போட்டு புதிது போல் மாற்றி விடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன எனில் உங்கள் தங்க நகைகள் அனைத்தும் மூழ்குவதற்கு ஏற்ப குடிக்கின்ற தண்ணீரை ஒரு பவுலில் ஊற்றி சூடு செய்யுங்கள்.

பிறகு லேசாக சூடானதும் இந்த நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்ப சோடாவை போட்டு கொதிக்க விடவும். பிறகு இந்த கொதிக்கும் நீரில் உங்கள் பழைய தங்க நகைகளை போட்டு விடுங்கள்.

gold jewel

இந்த ஆப்ப சோடாவில் நீங்கள் உங்கள் பழைய நகைகளை போடுவதின் மூலம் தங்கத்திற்கு எந்தவிதமான சேதாரமும் ஆகாது. எனவே நகைகளை நீங்கள் அந்த தண்ணீர் சூடு ஆறும் வரை அப்படியே விட்டு விடுங்கள்.

 பிறகு தங்க நகையின் மொத்த அழுக்கும் ஆப்ப சோடாவில்  கரைந்து விடும். இப்போது உங்கள் நகையை எடுத்துப் பார்த்தால் பளிச் என்று சுத்தமாக இருக்கும். எனினும் மீண்டும் ஒருமுறை நீங்கள் ஷாம்புவைக் கொண்டு உங்கள் நகைகளை பல் துலக்கும் பழைய பிரசால் நன்கு தேய்த்து எடுத்துவிட்டு தூய நீரில் ஒரு கழுவி காட்டன் துணியில் துடைத்து விடுங்கள்.

#image_title

இப்போது தங்கத்தில் இருந்த மொத்த அழுக்கும் நீங்கி பார்ப்பதற்கு புதிய நகையைப் போல பளிச்சென்று டால் அடிக்கும். இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் வளையல், உங்கள் தோடு மற்றும் இருக்கும் அனைத்து தங்க நகைகளையும் நீங்கள் சுத்தம் செய்ய முடியும்.