அறிய வகை நோயினால் பாதிப்பட்ட இன்னொரு நடிகை..! – பகீர் தகவல்கள்..!

மம்தா மோகன்தாஸ் : பிரபல நடிகை சமந்தா சமீபத்தில் மயோசைட்டிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இவர் குணம் பெற்று வர வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய ஆவலையும் விருப்பத்தையும் தங்களுடைய சமூக வலைதளங்கள் பக்கங்கள் வாயிலாக தெரிவித்து கொள்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க பிரபல நடிகை மம்தா மோகன் தாஸ் நிறம் இழப்பு என்ற ஒரு அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன் தாஸ்.

அதன் பிறகு குரு என் ஆளு தடையற தாக்க உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர் அதன்பிறகு பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மொழி படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார்.

இடையில் ஒருவரை திருமணம் செய்து அதுவும் விவாகரத்தில் முடிந்தது. இப்படி அடுத்த அடுத்த மிகப்பெரிய இக்கட்டான சோதனைகளை சந்தித்தாலும் அதிலிருந்து மன தைரியத்துடன் போராடி மீண்டு வந்தார் நடிகை மம்தா மோகன் தாஸ்.

ஆனால் தற்பொழுது தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அம்மணி. இந்த பழைய படங்களில் அவருடைய முகத்தோற்றமே முற்றிலுமாக மாறி இருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

இது குறித்து அவர் பதிவு செய்துள்ள பதிவில் நான் ஆட்டோ இம்யூன் என்று கூறக்கூடிய தன்னுர்வு நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறேன் இதன் காரணமாக என்னுடைய நிறத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார்,

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்களும் அவருடைய நலம் விரும்பிகளும் விரைவில் நீங்கள் இந்த நோயிலிருந்து மீண்டு வருவீர்கள் மீண்டும் சினிமா துறையில் உங்களுடைய பங்களிப்பு வெகுவாக இருக்க வேண்டும் என்பதை நான் பார்க்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம் என்று தங்களுடைய பிரார்த்தனைகளையும் அவருடைய கருத்துகளில் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை சமந்தா சமீபத்தில் வித்தியாசமான நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து பிரபல நடிகை மம்தா மோகன் தாஸ் இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியை ஆழ்த்தியிருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …