மனிஷா யாதவ், (Manisha Yadav) தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு நடிகை. தமிழில் சில படங்களில்தான் மனிஷா நடித்திருக்கிறார் என்றாலும், கவர்ச்சியில் இளசுகளை மயங்க வைத்தவர். இவர் நடித்த சில படங்களிலும், இவரது கவர்ச்சி நடிப்பு தூக்கலாக இருந்ததுதான், இவரை மறக்க முடியாமல் ரசிகர்கள் தவிப்பதற்கு முக்கிய காரணம்.
மனிஷா யாதவ், நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்தவர். பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
மனிஷா யாதவ் கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர். வயது 30 களை கடந்தும், அம்மணி இன்னும் பருவ மங்கையாகவே, ரசிகர்களை தன் கவர்ச்சியால் தன்வசப்படுத்தி இருக்கிறார்.
கடந்த 2012ம் ஆண்டில், இயக்குநர் பாலாஜி சக்திவேல் வழக்கு எண் 18ன் கீழ் 9 படத்தில்தான் இவர் அறிமுகமானார். பள்ளி மாணவியாக இதில் நடித்திருப்பார். சக மாணவன் ஒருவன், இவரை செக்ஸ் டார்ச்சர் செய்வது போலவும், அதனால் மாணவி முகத்தில் ஆசிட் ஊற்றுவது போன்ற காட்சியில், வேலைக்கார பெண் முகத்தில் ஆசிட்டை ஊற்றுவது போலவும், அதில் ரோட்டோர தள்ளுவண்டி டிபன் கடையில் வேலை செய்யும் பையன் மீது போலீசார் வழக்கை ஜோடிப்பது போலவும், இதில் கதை அமைக்கப்பட்டு இருக்கும்.
Manisha Yadavமிகச்சிறந்த கதை அம்சத்துடன், மிக யதார்த்தமாக எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு ஏராளமான விருதுகள் கிடைத்தது. 60வது தேசிய திரைப்பட விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, தெற்காசிய திரைப்பட விருது, 7 வது விஜய் விருது, மனிஷா யாதவ்வுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது போன்றவை கிடைத்தது. படமும், ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் தூனிகா தூனிகா என்ற தெலுங்கு படத்தில் மனிஷா யாதவ் அறிமுகமானார். அடுத்து தமிழில், ஆதலால் காதல் செய்வீர் என்ற படமும், டீன் ஏஜ் காதலை மையப்படுத்திய கதைதான். இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்து ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பணும் பாண்டியா, ஒரு குப்பைக் கதை, த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா உள்ளிட்ட படங்களில், மனிஷா யாதவ் நடித்தார்.
Manisha Yadavஇதில், ஒரு குப்பை கதை படத்தில், சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் சுகாதாரத் தொழிலாளி, டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடித்திருப்பார். இவரை திருமணம் செய்துகொள்ளும் மனிஷா யாதவ், ஒரு கட்டத்தில் அபார்ட்மெண்டில் பக்கத்து வீட்டில் இருக்கும் பணக்கார வாலிபனிடம் காதல் வயப்பட்டு, கைக்குழந்தையுடன், கணவனை ஏமாற்றிவிட்டு சென்று விடுவார். இந்த படத்திலும், மனிஷா கிளாமரில் ரசிகர்களை ஏங்க வைத்திருப்பார். அதே வேளையில், நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பார்.
வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின், 2ம் பாகத்தில் அம்மணி, சொப்பன சுந்தரி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ரசிகர்களுக்கு நடன விருந்து படைத்தது குறிப்பிடத்தக்கது.
சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் மனிஷா யாதவ், அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து, ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் அருவி ஒன்றில், அரைகுறை ஆடையில் குளிக்கும் வீடியோ ஒன்றை, மனிஷா யாதவ் அப்டேட் செய்திருக்கிறார். பார்த்தவுடனே பற்றிக் கொள்ளும் வகையில், இந்த வீடியோவில் அம்மணி, கிளாமரை அப்படியே கொட்டி இருக்கிறார். வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கும் ரசிகர்கள், மனதில் ஆனந்த குளியல் போடுகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.