கௌதம் கார்த்திக் உடன் உள்ள காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தாரா? – மஞ்சிமா!

காய் முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆகவேண்டும். அந்த வரிசையில் தற்போது நடிகர் கார்த்திக்கின் மகனான மறைந்த நடிகர் முத்துராமனின் பேரன் ஆகிய மூன்றாம் தலைமுறை நடிகராகிய கௌதம் கார்த்திக்கை காதலித்து வருவது உண்மை என்று அறிவித்திருக்கிறார் மஞ்சிமா.

 ஆரம்பத்தில் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் கௌதம் கார்த்திக். சீரான இடைவெளியில் பல படங்களில் நடித்து வரும் கௌதம் கார்த்திக் 2018 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளிவந்த தேவராட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

 இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் மஞ்சிமா மோகன். இந்த படத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்த இவர்கள் திடீரென இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறுகிறார்கள்.

 இதனை அடுத்து அவ்வப்போது முக்கியமான தினங்களில் குறிப்பாக மஞ்சமாவின் பிறந்தநாள் உள்ளிட்ட தருணங்களில் கௌதம் கார்த்திக் வாழ்த்து செய்திகளை வித்தியாசமாக அனுப்பி தனது காதலை ப்ரபோஸ் செய்திருக்கிறார்.

 ஆரம்ப நிலையில் ரசிகர்கள் இது பற்றி கேட்டபோது இவர்களுக்குள் காதல் இல்லை என்று இருவரும் ஒதுங்கிப் பேசி வந்தார்கள். இந்த நிலையில் தற்போது இவர்களுக்குள் காதல் இருக்கிறதே என்பதை சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

 அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் சில ரொமான்டிக்கான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் மஞ்சிமா.

 இதனை அடுத்து கௌதம் கார்த்திக் ஒரு சிறப்பு பந்தத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ள நீங்கள் என்னை தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்றும் நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன்.

 

நாம் ஒன்றாக சேர்ந்து நாம் பயணத்தை தொடங்குவதற்கு என்னால் காத்திருக்க முடியாது என்று உவகை பொங்க கூறி இருப்பது இவர்களது லவ்வை உறுதி செய்து விட்டது.மிக விரைவில் இவர்கள் திருமண அறிவிப்பு பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாக தான் என்று தெரிகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …