மீண்டும் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை மௌனிகா..! – எந்த சீரியல் தெரியுமா..?

சினிமா, டிவி சீரியல்கள் இரண்டிலும் நடிப்பவர் மெளனிகா. இயக்குநர் பாலுமகேந்திராவின் கண்டுபிடிப்பு. உன்கண்ணில் நீர் வடிந்தால் என்ற பாலுமகேந்திரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து என் இனிய பொன் நிலவே, வண்ண வண்ண பூக்கள், மே மாதம், சுபாஷ், அமராவதி, ஆனந்தம் விளையாடும் வீடு, ராசுக்குட்டி, பாணா காத்தாடி, கடைக்குட்டி சிங்கம் என பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதில், சில படங்களில் அவருக்கு நல்ல நடிப்பு வாய்ப்பு இருந்தது. ஆனால், சில படங்களில் சில நிமிடங்கள் வந்து செல்லும் கேரக்டர்களையும் ஏற்று நடித்தார். குறிப்பாக, ராசுக்குட்டி படத்தில் விரல்சூப்பும் வெகுளிப்பெண்ணாக நடித்திருப்பார் மெளனிக.

சினிமா வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை என்றாலும், சின்னத்திரை இவருக்கு நன்றாக கை கொடுத்தது. அந்த வகையில், நிம்மதி உங்கள் சாய்ஸ், சொந்தம், சொர்க்கம், சாரதா போன்ற சீரியல்களில் நடித்து, டிவி நாடக ரசிகர்களின் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால், 2009க்கு பிறகு, 10 ஆண்டுகள் கழித்து, ஆய்த எழுத்து என்ற சீரியலில் காளியம்மாள் என்ற கேரக்டரில் நடித்தார்.தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஆஹா கல்யாணம் என்ற சீரியலில் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார் மெளனிகா.

மெளனிகா வின் உண்மையான பெயர் விஜயரேகா, இவரது பெயரை மெளனிகா என மாற்றியது இயக்குநர் பாலுமகேந்திரா தான். இயல்பிலேயே மெளனிகா ஒரு மேடை நாடக நடிகை என்பதால், சினிமாவாக இருந்தாலும், டிவியாக இருந்தாலும் அவரது நடிப்பு இயல்பாக இருப்பதால், ரசிகர்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார்.சினிமாவில், பெரிய ஸ்டார் நடிகைகளாக வந்தவர்களே, ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்து, இமேஜ் டேமேஜ் ஆகி, டிவி சீரியலுககு வந்து விடுகின்றனர். ஆனால், நல்ல நடிகை என்பதாலேயே மெளனிகாவுக்கு பெரிய திரையிலும், சின்னத் திரையிலும் மாற்றி மாற்றி வாய்ப்புகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வாய்ப்புகளை அவர் மிகச் சரியாகவே பயன்படுத்தி கொண்டிருக்கிறார். தற்போது ஆஹா கல்யாணம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கும் மெளனிகாவுக்கு, டிவி சேனல் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து அமைந்தால், இதிலும் ஒரு ரவுண்டு வந்துவிடுவார். ஏனெனில், சினிமாவில் கமிட் ஆனால், சில நாட்களில் ஷூட்டிங் முடிந்து, வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். ஆனால், சீரியலில் கமிட் ஆனால், சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடிப்பு வாய்ப்பு தொடருமே, என்பதுதான். மெளனிகா பக்கம் காற்று வீசுகிறதா, என்பதை காத்திருந்து பார்ப்போம்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version