சமந்தாவின் பிரிவு நாகசைதன்யா வை பாதிக்கவில்லை சந்தோஷமாக இருப்பதாக நாகார்ஜுனா ஸ்டேட்மென்ட்!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா  சந்தாவை காதலித்து பெரியவர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் மனம்,ஆட்டோநகர் சூர்யா, மஜிலி போன்ற  தெலுங்கு படங்களில் இருவரும் தொடர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் 2017-ல் இருவரும் திருமணம் செய்து கொண்ட போதிலும் அந்த பந்தம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. மேலும் 2021 அக்டோபரில் பிரிந்ததாக இருவரும் அறிவித்தார்கள்.

இவர்கள் விவாகரத்து செய்து கொண்டு ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையிலும் இவர்களைப் பற்றிய விவாதங்கள் இன்னும் தொடர்கதையாக தான் உள்ளது. இதற்கான காரணத்தை சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களிடம் அடிக்கடி கேள்வி எழுப்பி வருகிறது

இதனை அடுத்து இடத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரது தந்தை நாகார்ஜுனா ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருந்தார். ஹாலிவுட் படமான பிரம்மாஸ்திராவின் வெற்றிக்குப் பிறகு  ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில்   ஏகப்பட்ட நாக சைதன்யாவின் விவாகரத்து பற்றிய கேள்விக்கு மிகவும் யதார்த்தமான முறையில் அவர் பதில் அளித்தார்.

மேலும் அவர் கூறுகையில் தனது மகன் நாக சைதன்யாவின் திருமண வாழ்வில் நடந்தது அனைத்தும் துரதிஷ்டவசமானது. அதை அதிக நேரம் தான் பேச விரும்பவில்லை என்றும் தற்போது சமந்தாவை பிரிந்த நிலையில் என் மகன் மகிழ்ச்சியோடு தான் உள்ளார் எனக்கு இதுவே போதுமானது என்று கூறினார்.

இதுபோலத்தான் நாக சைதன்யாவும் சமந்தாவுடன் இருந்த உறவு தற்போது முடிந்துவிட்டது. எங்களுக்குள் எதுவுமே இனி கிடையாது. எங்கள் வாழ்க்கையில் இருந்து நாங்கள் விலகி வெகுதூரம் சென்று விட்டோம். எனினும்  இதமான கேள்விகளை புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து எங்களிடம் கேட்கும்போது எனக்கு சலிப்புதான் ஏற்படுகிற ஒழிய வேறு எதுவும் ஏற்படவில்லை என்று  கூறியிருக்கிறார்.

அவர் வழியில் அவர்கள் சென்று விட்டார்கள். எனினும் மீடியாக்கள் அவரை விட்டு விடுவதாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் கேள்விகளை கேட்பதை விடுத்து ஆரோக்கியமான வளர்ச்சியில் எவ்வாறு பயணிக்கிறார்கள் என்பது போன்ற  கேள்விகளை பேட்டியின் போது கேட்டால் அது சிறப்பாகவும் அவர்கள் மனதை பாதிக்காமல் இருக்கும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …