“கவர்ச்சி நடிகைகள் எல்லாம் ஓரமா போயிடு..”  கில்லி பட நடிகை ஜெனிஃபர் கிளாமர் போஸ்..!

தமிழில் பல வருடங்களாக நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தும் கூட பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகாமல் இருந்தவர்தான் நடிகை நான்சி ஜெனிஃபர்.

1991 ஆம் ஆண்டு வெளியான கிழக்குக்கரை திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

தங்கையாக வாய்ப்பு:

தியாகம், சக்தி, நேருக்கு நேர், சந்திப்போமா என்று நிறைய படங்களில் நடித்தாலும் கூட அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் கில்லி. கில்லி திரைப்படத்தில் இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார்.

புவனா என்கிற அந்த கதாபாத்திரம் கிட்டத்தட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் .அதனை தொடர்ந்து அந்த படத்தில் இருந்து அவருக்கு வரவேற்புகள் கிடைக்க துவங்கியது. அதன் பிறகும் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஜெனிஃபர்.

சினிமா வேண்டாம்:

ஆனால் திரைப்படத்துறை மீது அவருக்கு பெரிதாக ஆர்வம் இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் எப்போதாவது ஒருமுறைதான் அவர் திரைப்படங்களில் எல்லாம் நடித்து வருகிறார். மற்றபடி சொந்தமாக அவர் சோப்பு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இதை பல பேட்டிகளிலும் அவர் கூறியிருக்கிறார். ஒரு பொழுதுபோக்காகதான் அவர் சினிமாவில் நடித்து வருகிறாரே தவிர அதை ஒரு தொழிலாக அவர் செய்யவில்லை. இதற்கு நடுவே சில டிவி நாடகங்களிலும் நடித்திருக்கிறார் ஜெனிஃபர்.

சீரியல்களில் வாய்ப்பு:

2021 ஆம் ஆண்டு சன் டிவியில் வெளியான சித்தி 2 சீரியலில் கூட ஜெனி என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். என்னதான் சினிமாவின் மீது அவருக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தாலும் கூட தொடர்ந்து சினிமாவிலும் சின்னத்திரையிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தற்சமயம் ஹெர்பல் சோப்புகளை தயாரித்து விற்று வருகிறார். இந்த சோப்பு விற்பனை நன்றாக இருப்பதாகவும் தனக்கு பிடித்து அதை செய்வதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் இந்த பேட்டிகளுக்கு பிறகு அவரது பிசினஸ் இன்னும் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதற்கு நடுவே மக்கள் மத்தியில் இந்த பேட்டிகளின் மூலம் பிரபலமான காரணத்தினால் அடிக்கடி பிரபலங்களை போலவே இவரும் புகைப்படங்களை வெளியிட துவங்கியிருந்தார். அந்த வகையில் தற்சமயம் நான்சி ஜெனிஃபர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

---- Advertisement ----