“செல்வத்தை அதிகரிக்க லட்சுமி நரசிம்மர் வழிபாடு..!” – கை மேல் பலன்..!

லட்சுமி நரசிம்மர் வழிபாடு: செல்வத்தை விரும்பாத நபர்களே இந்த உலகத்தில் இல்லை என்று கூறும் அளவுக்கு கலைமகளை விட திருமகளுக்கு செல்வாக்கு எப்போதும் அதிகமாக தான் உள்ளது. இதற்கு காரணம் கல்வி செல்வத்தை விட பொருட்செல்வத்தை ஈட்டுவது கடினம் என்பதை உணர்ந்து அந்த செல்வத்தை நித்தமும் தேடி நாம் அதை சேமிக்கிறோம்.

Lakshmi narasimmar pooja

அந்த வகையில் நீங்கள் உங்களுக்கான செல்வங்களை அதிக அளவு சேர்க்க நினைத்தால் ஐஸ்வரியத்தை அள்ளித் தருகின்ற லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவது மிகவும் அவசியம்.

 இவரை வழிபடுவதோடு நிற்காமல் இவருக்காக பானகத்தை நெய்வேத்தியம் செய்வதின் மூலம் உங்களுக்கு கூடுதல் பலன்களை வாரிக் கொடுப்பார்.

லக்ஷ்மி நரசிம்மரின் வழிபாட்டு முறை

நரசிம்மம் என்றாலே ஒளிப்பிழம்பு என்று பொருள்படும். எனவே மிகப்பெரிய ஒளி பிளம்பானவர் இந்த நரசிம்மர் என்று புராணங்கள் கூறுகிறது.மேலும் அதிகளவு சக்தியும் உக்கிரமும் கொண்டவர் இந்த நரசிங்கப் பெருமாள்.

Lakshmi narasimmar pooja

இந்த நரசிம்ம அவதாரமானது பக்த பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்தது. இவரை நீங்கள் வழிபடுவதன் மூலம் எதிரிகளின் தொல்லை உங்களுக்கு ஏற்படாது.

இஷ்ட தெய்வமாக நினைத்து வாரம் தோறும் லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் எல்லாம் தங்கு தடை இன்றி நடப்பதோடு உங்களுக்கு செல்வத்தையும் வாரி வழங்குவார். இவரை நீங்கள் சனிக்கிழமை மட்டுமல்ல புதன்கிழமைகளில் வழிபட்டு வருவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

Lakshmi narasimmar pooja

இந்த தினத்தில் இவருக்கு பானகத்தை மட்டுமே நெய்வேத்தியம் செய்து மனம் உருக வேண்டிக் கொண்டாலே போதும் எட்டு திசைகளில் இருந்தும் உங்களுக்கு நன்மைகள் வந்து சேரும்.உங்கள் வீட்டில் தீய சக்தி ஏதேனும் இருந்தாலும் அது விலகி ஓடும்.

மேலும் பிரதோஷ காலத்தில் சிவனைப் வழிபாடு செய்வது போலவே நரசிம்ம மூர்த்தியையும் வழிபட்டு வந்தால் இல்லத்தில் சுபிட்சம் ஏற்படுவதோடு, தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.நீங்கள் நினைத்த காரியம் நடந்தேறும்.

Lakshmi narasimmar pooja

எனவே கட்டாயம் லட்சுமி நரசிம்மரை சனிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள் சகல விதமான ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வீர்கள்.

எனவே மேற்கூறிய குறிப்புக்களை படித்து உணர்ந்து நீங்கள் அதற்கு தக்கவாறு நரசிம்மமூர்த்தி வழிபாட்டை உங்கள் வீட்டில் மேற்கொள்வதன் மூலம் எண்ணற்ற பயன்கள் உங்களுக்கு வந்து சேரும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version