தொழிலில் உச்சம் தொட்ட சர்ச்சை ராணி நயன்தாரா.. புழுங்கும் முன்னாள் காதலர்கள்.. மொத்த சொத்து மதிப்பு..

தொழிலில் உச்சம் தொட்ட சர்ச்சை ராணி நயன்தாரா.. புழுங்கும் முன்னாள் காதலர்கள்.. மொத்த சொத்து மதிப்பு..

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சில லட்சங்களை சம்பளமாக பெற்றாலே அது பெரிய விஷயம். ஏனெனில் 20 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய் என சம்பளம் கிடைப்பேத அந்தக் காலத்தில் குதிரை கொம்பாக இருக்கும். அதனால் 20 ஆண்டுகள் 30 ஆண்டுகள் சினிமாத்துறையில் இருந்தவர்கள் கூட அதிகபட்சமாக ஒரு 25 லட்சம் 30 லட்சம் தான் அவர்களை மொத்த சொத்து மதிப்பாக இருக்கும்.

பல நூறு கோடிகளுக்கு அதிபதி

ஆனால் இப்போது சினிமாவில் நடிக்கும் சில நடிகைகள் ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள். அவர்கள் சில ஆண்டுகள் மட்டும் சினிமாவில் தொடர்ந்து நடித்தால் போதும், ஏறக்குறைய பல நூறு கோடிகளுக்கு அதிபதியாகி விடுகிறார்கள்.

இதற்கு அவர்கள் ஒரு படத்தில் நடிக்க ஒதுக்கும் கால்ஷீட் என்பது 30 நாட்கள், 45 நாட்கள், அதிகபட்சம் 60 நாட்கள்தான். வருடத்தில் ஆறு படங்கள், ஏழு படங்கள் நடித்து விடும் அவர்கள், இதன் மூலம் வருஷத்துக்கு 100 கோடி வரை மிக எளிதாக வருமானம் பார்த்து விடுகின்றனர்.

நயன்தாரா

தமிழ் சினிமாவில், தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார் நயன்தாரா. கோலிவுட் சினிமாவில் 21 ஆண்டுகளுக்கு மேலாக, முன்னணியின் நடிகையாக கொடிக்கட்டி பறந்து வருகிறார் நடிகை நயன்தாரா. அவர் இப்போது லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

தொழிலில் உச்சம் தொட்ட சர்ச்சை ராணி நயன்தாரா.. புழுங்கும் முன்னாள் காதலர்கள்.. மொத்த சொத்து மதிப்பு..

மானசிகாரே அறிமுகம்

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா, கடந்த 2003 ஆம் ஆண்டு மானசிகாரே என்ற மலையாள படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஐயா படத்தில், அவருக்கு அவரை சரத்குமார் ஜோடியாக நடிக்க வைத்தார் டைரக்டர் ஹரி.

ரஜினிக்கு ஜோடியாக…

இதையடுத்து ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவிற்கு அமைந்தது. அதன் பிறகு விஜய், அஜித்குமார், சூரியா, தனுஷ், சிம்பு, சீயான் விக்ரம் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக முன்னுக்கு வந்தார். ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

காதல் திருமணம்

இதை அடுத்து 2015 ஆம் ஆண்டில், நானும் ரவுடிதான் என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, அந்த படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது. ஏழு ஆண்டுகளாக காதலித்த நிலையில், 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தொழிலில் உச்சம் தொட்ட சர்ச்சை ராணி நயன்தாரா.. புழுங்கும் முன்னாள் காதலர்கள்.. மொத்த சொத்து மதிப்பு..

வாடகைத்தாய் குழந்தைகள்

இந்த தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு உயிர், உலகம் என பெயர் வைத்து அந்த குழந்தைகளை பாசமாக வளர்த்து வருகின்றனர்.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, பல பிஸினஸ்களிலும் நயன்தாரா ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். 9ஸ்கின் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பிராண்டில் லிப் பாம், லிப்ஸ்டிக், உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி பெமி9 என்கிற சானிட்டரி நாப்கின் பிராண்டை துவங்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சினிமாவை ஆட்சி செய்து வரும் நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துகள் மதிப்பு

அதன்படி நயன்தாராவின் சொத்து மதிப்பு இதுவரை 200 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு படத்தில் நடிக்க 10 கோடிக்கு மேல் அவர் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.

அது தவிர சென்னை மற்றும் மும்பையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர பங்களாக்கள் இருக்கிறது. மேலும் தனது சொந்த தேவைகளுக்காக தனியாக 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜெட் விமானம் ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.

தொழிலில் உச்சம் தொட்ட சர்ச்சை ராணி நயன்தாரா.. புழுங்கும் முன்னாள் காதலர்கள்.. மொத்த சொத்து மதிப்பு..

பல கோடிகளில் சொகுசு கார்கள்

நயன்தாரா அது மட்டும் இன்றி ரூ. 1.76 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யு 7 சீரிஸ் என உயர்ரக கார், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ், பிஎம்டபிள்யு சீரிஸ் 5 என்ற 2 சொகுசு கார்கள், மெர்சிடிஸ் பென்ஸ் பேமேட்ச் என்ற காரை விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு பிறந்த நாள் பரிசளித்துள்ளார். இந்த காரின் விலை ரூ. 2.69 கோடி முதல் 3.40 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படுகிறது.

புழுங்கித் தவிக்கும் மாஜி காதலர்கள்

சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படம், சொந்த தொழிலில் உச்சம் தொட்ட நயன்தாராவின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கையை பார்த்து சிலம்பரசன், பிரபுதேவா போன்ற மாஜி காதலர்கள் புழுங்கித் தவிக்கின்றனர். நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு 200 கோடிகளுக்கு மேல் இருக்கும் என்பது அவரது ரசிகர்களையே வாய்பிளக்க வைத்திருக்கிறது.

தொழிலில் உச்சம் தொட்ட சர்ச்சை ராணி நயன்தாரா.. புழுங்கும் முன்னாள் காதலர்கள்.. மொத்த சொத்து மதிப்பு..