முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை நஸ்ரியா..! – வாயடைத்து கிடக்கும் ரசிகர்கள்..!

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான நேரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நஸ்ரியா அதனை தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.

அவருக்கு என்று முன்னணி நடிகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளம் இருந்தது. அந்த சமயத்தில் திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு ரசிகர்களை ஏமாற்றிய நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்றே விலகி இருந்தார்.

தற்போது மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார் நஸ்ரியா. 2018 ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியான “கூடே” என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு திரும்பி வந்த நஸ்ரியா தற்பொழுது நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள அடடே சுந்தரா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாகி தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகின்ற ஜூன் மாதம் 10ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாக உள்ளது.

முதன் முறையாக நீச்சல் உடையில்..

இந்நிலையில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ள நடிகை நஸ்ரியா நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெப்சீரிசை இசை தயாரிப்பது இவருடைய கணவர் பகத் பாசில் என்பது கூடுதலான தகவல்.

மேலும், பகத் பாசில் இந்த வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக நடக்கும் ஆன்லைன் மோசடிகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த வெப் சீரீஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெப்சீரிஸ் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட நான்கு இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கில மொழியிலும் என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …