பக்கா… புதுப்பொலவில் மீண்டும்… பழமை வாய்ந்த ஏவிஎம் ஸ்டுடியோ…!!

இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் பழமையான ஸ்டூடியோக்கள் நிறைய உள்ளது. அந்த வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த ஏவிஎம் ஸ்டுடியோவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை என்று கூறலாம்.

பல வெற்றி படங்களை தந்த இந்த ஸ்டுடியோவானது தற்போது புது பொலிவுடன் மீண்டும் பிரம்மாண்டமான நல்ல படங்களை கொடுப்பதற்காக களம் இறங்கி உள்ளது.

பல சினிமா ஜாம்பவான்களை தந்த இந்த ஸ்டுடியோவின் ஒரு பகுதி ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்ட நிலையில் மீறி இருக்கும் இடங்களில் தியேட்டர்கள், ஸ்டுடியோகள் செயல்பட்டு வந்தது.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் யாரும் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை தவிர்த்து வரக்கூடிய வேளையில் கொரோனா பெரும் தொற்று காரணமாக சென்ற ஆண்டுக்கு முன்பு தியேட்டரும் மூடப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து அந்த இடம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது . இந்த புதுப்பிக்கப்பட்ட அந்த இடத்தில் திருமணம் படப்பிடிப்பு பட பூஜை மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு அது மிகப் பொலிவுடன் தயாராகிவிட்டது.

 இதைப் பார்த்து வரும் திரை உலகமே ஆச்சரியத்தில் மட்டுமல்ல இது போன்ற ஒரு இடம் எப்போதும் வேண்டும் என்று மனதுக்குள் பேசிக் கொள்கிறார்கள். தற்போது புது பொலிவுடன் தயாராகி இருக்கும் இந்த இடமானது சுமார் 7200 சதுர அடியில் ரூம், ஹால் போன்றவற்றை கொண்டுள்ளது.

ஏற்கனவே இந்தப் பகுதிகளில் பல படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வரும் இந்த வேளையில் இப்போது திருமணம் தொடர்பான நிகழ்வுகளும் நடைபெற உள்ளதால் அதற்கான புக்கிங்குகள் இப்போது இருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 மேலும் தமிழகத்தில் படப்பிடிப்பு மற்றும் சினிமா தொடர்பான விழாக்களுக்கு ஒரு சில இடங்கள் மட்டுமே உள்ளது. அந்த வகையில் இப்போது ஏவிஎம் புதுப்பிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த வளாகம் பிஸியாக மாறிவிடும் என்று திரை உலக வட்டாரமே நம்புகிறது.

 இதனை அடுத்து பழமை மாறாத புதுமையுடன் விளங்கும் ஏவிஎம் ஸ்டுடியோவின் பழமையை எண்ணி கோடம்பாக்கமே பேசி வருகிறது எனக் கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …