சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறியவர். துவக்கத்தில், விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சியில் ஆங்கராக பணிபுரிந்த சிவகார்த்திகேயன், இயக்குநர் பாண்டியராஜன் இயக்கத்தில் மெரினா படம் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இதில், ஓவியா தான் கதாநாயகி. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகரானார்.
அதன்பின் மனம்கொத்தி பறவை, சீமராஜா, காக்கிச்சட்டை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஹீரோ, ரெமோ, மான் கராத்தே, பிரின்ஸ், டாக்டர், வேலைக்காரன், நம்ம வீட்டுப்பிள்ளை, கனா கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இதில், சில படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்தன. இதனால், மிக விரைவிலேயே முன்னணி நாயகனாக சிவகார்த்திகேயன் முன்னிலைக்கு வந்தார்.
இப்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பின்பு, உலகநாயகன் கமல்ஹாசனின் சினிமா தயாரிப்பு நிறுவனமாக, ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில், சிவகார்த்திகேயன், கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில், சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்,
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்துக்கு, இப்போதைக்கு SK21 என பெயரிடப்பட்டு இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படம், ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 51வது படமாகும்.
சமீபத்தில், இந்த படத்தின் துவக்க விழா நடந்தது. விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று, கேமரா முன் கிளாப் அடித்து, படப்பிடிப்பை துவக்கி வைத்தார். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
முன்னதாக விழாவில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். படத்தில், தொழில் நுட்ப கலைஞர்கள் பலரும், படத்தில் நடிக்கும் கலைஞர்களுடன் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
நடிகர் கமல்ஹாசனுடன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த SK21 படத்தின் துவக்க விழா வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கமல், சிவகார்த்திகேயன் முதன்முறையாக கைகோர்த்துள்ள நிலையில், இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என, அவர்களது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.