எய்ட்ஸ் பாதித்து தனியாக இறந்து கிடந்த கமல் பட நடிகை..!

எய்ட்ஸ் பாதித்து தனியாக இறந்து கிடந்த கமல் பட நடிகை..!

கோடிகளில் புரண்டு மக்கள் மத்தியில் பிரபலமான நபராக இருக்கும் சில நடிகைகளின் கடைசி நாட்கள் நினைத்துப் பார்க்க முடியாத படி கொடூரமாக மாறிவிடுவது இயல்பான ஒன்றாக தற்போது உருவாக்கி உள்ளது.

அந்த வகையில் நடிகர் கமலஹாசனோடு இணைந்து நடித்த நடிகை ஒருவரின் இறுதி நாள் நினைத்துப் பார்க்கும்போதே மனதில் பக்.. பக்.. நிமிடங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் மிகவும் சோககரமாக மாறி இருப்பதை பற்றிய விஷயத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

நிஷா நூர்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கும் நிஷா நூர் 1986 ஆம் ஆண்டு கல்யாண அகதிகள் என்ற படத்திலும், 1990 இல் ஐயர் தி கிரேட் படத்தில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறினார்.

இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் கமலஹாசனோடு இணைந்து இந்த இரு படங்களில் நடிப்பதற்கு முன்பே டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவரது அற்புதமான நடிப்பை பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

எய்ட்ஸ் பாதித்து தனியாக இறந்து கிடந்த கமல் பட நடிகை..!

திரைப்படங்களில் அற்புதமாக நடித்து வந்த இவரது வாழ்க்கை பரிதாபகரமாக மாறுவதற்கு தயாரிப்பாளர் ஒருவர் தான் காரணம் என்று தற்போது சொல்லப்பட்டு வருகிறது. 80 காலகட்டங்களில் கமல், ரஜினி உடன் இணைந்து நடித்து வந்த இவர் திடீர் என்று நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இதற்கு காரணம் இவரை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்தியதின் காரணத்தால் தான் திரை உலகில் நடிக்க முடியாமல் போகிவிட்டது என்று தெரியவந்துள்ளது. மேலும் இவர் பாலியல் தொழில் ஈடுபட்ட விவகாரம் தெரிந்த சில இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்கவில்லை.

இந்த நிலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு தடம் மாறிப் போன நிஷா எங்கே போனார் என்பது பல ஆண்டுகளாக பலருக்கும் தெரியவில்லை.

உயிரை பறித்த எய்ட்ஸ்..

இந்நிலையில் நடிகை நிஷா நூர் நாகை அருகே உள்ள தர்கா ஒன்றில் பரிதாப நிலையில் சாலையோரம் எலும்பு கூட்டு நிலையில் கண்டறியப்பட்டார். இவரது உடலில் புழுக்களும், ஈக்களும் மொய்த்தபடி இருந்ததை அடுத்து முஸ்லிம் முன்னேற்றக் கழக ஆட்கள் அவரை மீட்டு தாம்பரத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

அப்போது தான் அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த விஷயம் தெரிய வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபகரமாக இறந்துவிட்டார்.

எய்ட்ஸ் பாதித்து தனியாக இறந்து கிடந்த கமல் பட நடிகை..!

இதனை அடுத்து தன் அருகே யாரும் இல்லாமல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தனியாக இறந்து கிடந்த கமல் பட நடிகை நிஷா நூர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும் தாய் இல்லாத காரணத்தால் இவர் வாழ்க்கை தடம் புரண்டு எந்த அளவு அவரை பாதித்து கடைசியில் இறப்புக்கு அழைத்துச் சென்று விட்டது என்ற விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

இளமையில் வாழ்வதெல்லாம் வாழ்க்கை அல்ல. முதுமையை முழுமையாக எந்த ஒரு சிரமமும் இல்லாமல் கடத்துவது மிகப்பெரிய விஷயம் என்ற உண்மையை இவரது வாழ்க்கை உணர்த்தி உள்ளது.

மேலும் இந்த நிகழ்வானது திரையுலக மத்தியில் இருக்கும் அனைவரையும் உலுக்கி உள்ளது. அந்த அளவு கொடூரமான இறப்பாக இவரின் இறப்பு கருதப்படுகிறது.

About Brindha

Avatar Of Brindha

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version