Uncategorized
எளிமையான முறையில் உடல் எடை குறைக்கலாம்..! – ஈசியான டிப்ஸ்..!
உடல் எடை குறைக்க டிப்ஸ் : நாம் பாரம்பரிய உணவுகளை விடுத்து விட்டு இன்று துரித உணவினை எடுத்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற சீர்கேடு உடலில் ஏற்பட்டுள்ளது. அந்த வரிசையில் அதிகபட்ச கொலஸ்ட்ரால் நமது உடலில் இருப்பதால் எண்ணற்ற பாதிப்புகள் உடலுக்கு ஏற்பட்டு ஆரோக்கியம் சீர்குலைகிறது.
இதனால் தான் இளம் வயதினரையே தாக்கக்கூடிய இதய நோய் இந்த கொலஸ்ட்ரால் அதிகரிப்பாட்டால் ஏற்படுகிறது. இதனை தடுக்கவும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கக்கூடிய எளிய வழிகள் என்னென்ன என்று தெரியுமா?
கொலஸ்ட்ராலை குறைக்கும் எளிய வழிகள்:
நீங்கள் உட்கொள்ளக்கூடிய உணவில் இருக்கக்கூடிய அதிகபட்சமான ட்ரான்ஸ் கொழுப்புகளை நீங்கள் கட்டாயம் குறைப்பது உங்களுக்கு நல்லது.
மேலும் கட்டாயம் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் கால் மணி நேரத்தில் இருந்து அரை மணி நேரமாவது நீங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது அதிகபட்ச கொழுப்பு எரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள...