பிக்பாஸ்.. விலகினார் கமல்.. என்ன காரணம்..? அறிக்கையில் இதை கவனிச்சீங்களா..?
தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற சின்னத்திரையின் நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகும். பிக் பாஸ் முதல் சீசன் தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொள்வதற்கும் நிறைய பேர் ஆர்வம் காட்டி வருவது உண்டு. ஏனெனில் கிட்டத்தட்ட 100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும். அந்த 100 நாட்களும் அதில் பங்கேற்பவர்கள் செய்யும் விஷயங்கள் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடையும்.
இந்த ஒரு காரணத்தினாலேயே தொடர்ந்து பிக்பாஸில் பங்கு பெறுபவர்கள் எளிதாக பிரபலம் அடைய முடிகிறது. அதிகபட்சம் பிக்பாஸை முடித்துவிட்டு வெளியில் வரும் பொழுது அவர்களுக்கு நிறைய பட வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைப்பது உண்டு.
பிக்பாஸ் தமிழ்:
பிக்பாஸ் முதல் சீசன் முதலே அதில் கலந்து கொண்ட பலரும் இப்பொழுது பல துறைகளில் பெரிய இடத்தில் இருக்கின்...